தோபர்ன் மடவை
Appearance
தோபர்ன் மடவை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | முகிலிபார்ம்சு
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | மு. தோபர்னி
|
இருசொற் பெயரீடு | |
முகில் தோபர்னி ஜோர்டான் & இசுடார்க்சு, 1896 | |
வேறு பெயர்கள் | |
சீனோமுகில் தோபர்னி |
தோபர்ன் மடவை என்பது (முகில் தோபர்னி) கிழக்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படும் முகிலிடே குடும்பத்தைச் சேர்ந்த சாம்பல் மடவை மீன் சிற்றினமாகும். இது கலாபகசுத் தீவுகளைச் சுற்றி பொதுவாகக் காணக்கூடியது. ஆனால் இவை மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் கடற்கரைகளிலும் காணப்படுகிறது. இந்த சிற்றினம் 29.5 சென்டிமீட்டர்கள் (11.6 அங்) நீளம் வரை வளரக்கூடியது. இது முன்னர் சீனோமுகில் பேரினத்தின் அறியப்பட்ட ஒரே உறுப்பினராகக் கருதப்பட்டது.
இதன் சிற்றினப் பெயர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சூழல் தொடர்பான பழக்கவழக்கங்களை ஆராயும் துறையில் விரிவுரையாளராக இருந்த வில்பர் வில்சன் தோபர்ன் (1859-1899) நினைவாக இடப்பட்டது. இங்கு டேவிட் ஸ்டார் ஜோர்டான் தலைவராக இருந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Christopher Scharpf; Kenneth J. Lazara (4 June 2018). "Mugiliformes". The ETYFish Project Fish Name Etymology Database. Christopher Scharpf and Kenneth J. Lazara. பார்க்கப்பட்ட நாள் 4 November 2018.