உள்ளடக்கத்துக்குச் செல்

தோட்டி (பழங்குடி மக்கள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தோட்டி பழங்குடி மக்கள்,(Thoti), இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் வாழும் பூர்வ குடிகள் ஆவர்.கோண்டி மொழி பேசும் இம்மக்கள் கோண்டு பழங்குடி இனத்தின் உட்பிரிவினர் ஆவார். இம்மக்கள் தெலங்கானாவின் அதிலாபாத் மாவட்டம், ஐதராபாத் மாவட்டம், கரீம்நகர் மாவட்டம், மகபூப்நகர் மாவட்டம், மேடக் மாவட்டம், நல்கொண்டா மாவட்டம், நிசாமாபாத் மாவட்டம் மற்றும் வாரங்கல் மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்தாலும்; அதிலாபாத் மாவட்டத்தின் 42 கிராமங்களில் அதிகமாக வாழ்கின்றனர். 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மக்களின் தொகை 2231 ஆகும். [1]தெலங்காணாவின் அதிலாபாத் மாவட்டத்தில் வசிக்கும் தோட்டி பழங்குடியினர் பாரம்பரியமாக பச்சை குத்துக்கொள்வதும், அதையே ஒரு தொழிலாக செய்யும் வழக்கம் உள்ளது.[2]

மேற்கோள்கள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோட்டி_(பழங்குடி_மக்கள்)&oldid=4147372" இலிருந்து மீள்விக்கப்பட்டது