தோட்டா சீதாராம இலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோட்டா சீதாராம இலட்சுமி
Thota Seetharama Lakshmi
மாநிலங்களவை உறுப்பினர் ஆந்திரப் பிரதேசம்
பதவியில்
10 ஏப்ரல் 2014 – 9 ஏப்ரல் 2020
தனிநபர் தகவல்
பிறப்பு 12 செப்டம்பர் 1951 (1951-09-12) (அகவை 72)
உப்பலூரு, மேற்கு கோதாவரி மாவட்டம்
அரசியல் கட்சி தெலுங்கு தேசம் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) திரு தோட்டா சத்தியநாராயணா

தோட்டா சீதாராம இலட்சுமி (Thota Seetharama Lakshmi)(பிறப்பு: செப்டம்பர் 12, 1951 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசம், மேற்கு கோதாவரி மாவட்டம் உப்பலூரைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு தேசம் கட்சியினைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக (மாநிலங்களவை) உறுப்பினராக 2014 முதல் 2020 வரை பதவியிலிருந்தார்.[1] [2]

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் முன், 2005 முதல் 2010 வரை பீமாவரம் நகராட்சித் தலைவராகப் பணியாற்றினார். 2009 முதல் ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் மாவட்டத் தலைவராகவும் உள்ளார்.

மேலும் பார்க்கவும்[தொகு]

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர்கள்

மேற்கோள்கள்[தொகு]