தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,பேச்சிப்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம்,பேச்சிப்பாறை

இது மேற்கு மலைத் தொடரின் அடிவாரத்தில் குலசேகரத்திலிருந்து 10கி.மீ தொலைவிலும்,மார்த்தாண்டத்திலிருந்து 23கி.மீ தொலைவிலும்,நாகர்கோவிலிருந்து 45கி.மீ தொலைவிலும் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து 75கி.மீ தொலைவிலும் இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது. பேச்சிப்பாறைக் கணுவாயின் ஒரு கரையில் பேச்சிப்பாறை அணையிலிருந்து 1.5கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

குறிக்கோள்கள்

அதிக மழை பெறும்பகுதியில் பழங்கள், காய்கறிகள், நறுமணப் பயிர்,மலைத் தோட்டம் மற்றும் மலர் பயிர்களின் பயிர் வளர்ச்சி,மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு சார்ந்த ஆராய்ச்சிகள்.மண்டல வேளாண் அறிவியல் நிலையம் மூலம் உள்ளூர் விவசாயிகள், மலைசாதியினர், அலுவலர்கள் போன்றோருக்கு கூட்டங்கள், கலந்தாய்வு, சோதனை வயல், செயல்முறை விளக்கம் மற்றும் வயல் நாள் போன்றவற்றின் மூலம் பயிற்சி வழங்குதல்.

வேளாண் வானிலையில் அறிவுரைச் சேவை – தட்பவெட்ப நிலை பற்று அறிந்து அதற்கேற்ப சாகுபடி செயல்முறைகளை மேற்கொள்ளவென விவசாயிகளுக்காக வேளாண் வானிலை பற்றிய பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

இளம் இரப்பர் மரக்கன்றுகளிடையே மூலிகைப் பயிர்களை ஊடுபயிராக இடுவது பற்றி அறிவுறுத்துதல்.

பலாப்பழம் மற்றும் எல்லாப் பருவங்களிலும் காய்க்கும் மா வகைகளில் சுற்றாய்வு செய்து அதிக மகசூல் தரும் இரகங்களைக் கண்டறிதல்.

முக்கிய பயிர்கள்

பழ வகைகள் - வாழை,அன்னாசி,மா,பலா,கொய்யா,சப்போட்டா,மற்றும் சிறு பழங்கள்.

உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள்

வாழை

செவ்வாழையில் துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க 25 கி.கி தொழுஉரம், 25 கி ஜிங்க்சல்பேட், 500 வேப்பம் பிண்ணாக்குக் கலந்து இடுதல்.

வாழைத் தண்டில் மோனோகுரோட்டாபாஸ் அல்லது நீருடன் கலந்த டை மெத்தொயேட் (5 மி.லி நீரில் 1 மி.லிருந்து)கலவையை ஊசி மூலம் தண்டுத்துளைப்பான் கட்டுப்படுத்துதல். இவ்வாறு மோனோகுரோட்டாபாஸ் மற்றும் டைமெத்தொயேட் மருந்துகளின் பயன்பாட்டு செலவு வரவு விகிதம் முறையே1:2.85 மற்றும் 1:2.79 ஆகும்.

மேற்கோள் 1. http://agritech.tnau.ac.in/about_us/abt_us_reserach_pechiparai.html 2. https://www.mycollege.in/Horticultural-Research-station,-Pechiparai/809.php