தோடி கோடலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தோடி கோடலு
தயாரிப்புடி. மதுசூதன ராவ்
கதைஆச்சார்யா ஆத்ரேயா (வசனம்)
மூலக்கதைநிக்ஸ்ருதி (புதினம்)
திரைக்கதைஅட்ருத்தி சுப்பா ராவ்
டி. மதுசூதன ராவ்
ஆச்சார்யா ஆத்ரேயா
இசைமாஸ்டர் வேணு
நடிப்புஅக்கினேனி நாகேஸ்வர ராவ்
சாவித்திரி
ஒளிப்பதிவுபி. எஸ். செல்வராஜ்
படத்தொகுப்புஅட்ருத்தி சுப்பா ராவ்
கலையகம்அன்னபூர்ணா பிக்சர்ஸ்
வெளியீடுசனவரி 11, 1957 (1957-01-11)
ஓட்டம்182 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

தோடி கோடலு (Thodi Kodallu) அன்னபூர்ணா பிக்சர்ஸ் சார்பில் டி. மதுசூதன ராவ் தயாரிக்க அட்ருத்தி சுப்பா ராவ் இயக்கத்தில் 1957இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இப்படத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் இசை மாஸ்டர் வேணு. சரத் சந்திர சாட்டர்ஜி பெங்காலி மொழியில் எழுதிய "நிக்ஸ்ருதி" என்ற புதினத்தின் தழுவலாகும் . இதே சமயத்தில் தமிழிலும் "எங்கள் வீட்டு மகாலட்சுமி" (1957) என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்குத் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது.

கதை[தொகு]

இந்த படம் ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சினைகள் மற்றும் நன்மைகள், ஆகியவற்றை சித்தரிக்கிறது. குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்க சிலர் எப்படி நிலைமையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறார்கள். எனினும், ஒற்றுமை என்பது குடும்பத்தின் உயிர் மூச்சாகும் என்பதையும் காடுகிறார்கள்.. வழக்கறிஞர் குட்டும்ப ராவ் (எஸ்.வி.ரங்கா ராவ்) மற்றும் அவரது மனைவி அன்னபூர்ணா (கண்ணாம்பா) ஆகிய இருவரும் குடும்பத்தின் மூத்தவர்கள், அவரது சகோதரர் ரமனையா (ரெலங்கி) மற்றும் அவரது மனைவி அனுசுயா (சூர்யகாந்தம்) ஆகியோர் ஒன்றாக ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர். சத்யத்தை (அக்னிநெனி நாகேஸ்வரா ராவ்), இருவரும் தங்களுடைய உறவினர்களாக கருதுகின்றனர். அன்னபூர்ணா ஒரு தீவிர நோயாளியாக இருப்பதால் சத்யத்தின் மனைவி சுசீலா குடும்பத்தை கவனித்து வருகிறாள். அன்னபூர்ணா மற்றும் சுசீலா ஆகியோரிடையே பொறாமையை ஏற்படுத்தி அனுசுயா அவர்களுக்கு இடையே பிளவை உருவாக்குகிறாள். இதனால் குடும்பத்தை விட்டு சத்யம் மற்றும் அவனது மனைவி ஆகிய இருவரும் கிராமத்திற்கு செல்கின்றனர் சத்யம் விவசாயம் செய்து முன்னேறி வருகிறான், அரிசி ஆலையின் மேலாளர் வைகுந்தம் ( ஜக்கையா) மற்றும் அவர்களின் தொலைதூர உறவினர் இருவரும் இக்குடும்பத்தின் மீது வீண் வதந்திகளை பரப்பி, ரமனையாவை மோசமாக சித்தரிக்க முயல்கிறார்கள். இது அனசுயா மனந்திரும்ப வழிவகுக்கிறது. சத்யம் குடும்பத்திற்காக போராட முடிவெடுத்து வைகுந்தத்தின் தீய செயல்களை குட்டும்ப ராவின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார். பின்னர், சத்யம் மற்றும் சுசீலா ஆகிய இருவரும் கூட்டு குடும்பத்திற்கு திரும்பி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

Cast[தொகு]

படக்குழு[தொகு]

 • கலை: எஸ். கிருஷ்ணா ராவ்
 • நடனம்: ஏ. கே. சோப்ரா
 • வசனம்: ஆச்சார்யா ஆத்ரேயா
 • வபாடல்கள்: ஆச்சார்யா ஆத்ரேயா, ஸ்ரீ ஸ்ரீ, கொசராஜு, டப்பி தர்மா ராவ்
 • பாடியோர்: கண்டசாலா, பி. சுசீலா, ஜிக்கி, மாதவபெட்டி சத்யம்
 • இசை: மாஸ்டர் வேணு
 • உதவி இயக்குனர்: வி. மதுசூதன ராவ், கே. விஸ்வநாத்
 • கதை:சரத் சந்திர சாட்டர்ஜி
 • திரைக்கதை: அட்ருத்தி சுப்பா ராவ், டி. மதுசூதன ராவ், ஆச்சார்யா ஆத்ரேயா
 • ஒளிப்பதிவு: பி. எஸ். செல்வராஜ்
 • தயாரிப்பு: டி. மதுசூதன ராவ்
 • படத்தொகுப்பு - இயக்கம்:அட்ருத்தி சுப்பா ராவ்
 • பதாகை: அன்னபூர்ணா பிக்சர்ஸ்
 • வெளிவந்த நாள்: 11 ஜனவரி 1957

ஒலித்தொகுப்பு[தொகு]

இப்படத்தின் இசையமைப்பு மாஸ்டர் வேணு. அனைத்துப் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றது ஆடியோ கம்பெனி இதை வெளியிட்டது.

விருது[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடி_கோடலு&oldid=2900223" இருந்து மீள்விக்கப்பட்டது