தோடிகானா

ஆள்கூறுகள்: 12°30′40″N 75°28′12″E / 12.511079°N 75.469894°E / 12.511079; 75.469894
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோடிகானா
நகரம்
தோடிகானா is located in கருநாடகம்
தோடிகானா
தோடிகானா
Location in Karnataka, India
தோடிகானா is located in இந்தியா
தோடிகானா
தோடிகானா
தோடிகானா (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°30′40″N 75°28′12″E / 12.511079°N 75.469894°E / 12.511079; 75.469894
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தெற்கு கன்னட மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்அரே பாசை கன்னடம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அருகிலுள்ள நகரம்புட்டூர், மடிக்கேரி

தோடிகானா (Thodikana) என்பது இந்திய மாநிலமான கருநாடகாவின் தெற்கு கன்னட மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சுல்லியா வட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான சிறிய கிராமமாகும். இது மங்களூர் நகரத்திலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்த் ஊர் அதன் மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு மிகவும் பிரபலமானது. இந்த ஆலயம் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் பல நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகிறார்கள். கோயிலுக்கு தென்கிழக்கில் சில மீட்டர் தொலைவில் மீன்குண்டி எனப்படும் ஒரு இடம் உள்ளது. இங்கு வரும் பார்வையாளர்கள் பாரம்பரியமாக மீனுடன் அரிசி உணவை உண்பார்கள். ஆனாலும், மீனைக் கொல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

கோயில் தினசரி யாத்ரீகர்களுக்கு பிரசாதமாக இலவச மதிய உணவை வழங்குகிறது. கோயிலிலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் தேவாரகுந்தி அருவி அமைந்துள்ளது.

இக்கிராமத்தில் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே உள்ளனர். பாக்கு, தேங்காய், இரப்பர், வெனிலா, மிளகு போன்ற பயிர்களின் தோட்டங்களில் பணிபுரிகின்றனர்.

போக்குவரத்தும், தங்குமிடமும்[தொகு]

தோடிகானாவுக்கு பயணிக்க பின்வரும் போக்குவரத்து வசதிகள் உள்ளன:

  • வட்டத் தலமையகமான சல்லியாவுக்கு ஒவ்வொரு மணி நேரமும் தனியார் பேருந்துகள் கிடைக்கின்றன.
  • தனியார் ஜீப்புகளை சல்லியா, அரந்தோடு அல்லது அருகிலுள்ள பிற இடங்களிலிருந்து வாடகைக்கு எடுக்கலாம் .
  • கர்நாடகாவின் இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள்; மைசூரும் மங்களூரும் தோடிகானா அருகே செல்கின்றன.
  • சல்லியாவில் தங்கும் விடுதிகள் இருக்கின்றன.

முக்கிய இடங்கள்[தொகு]

  • பயஸ்வினி ஆறு தோடிகானா வழியாக பாய்கிறது.
  • தோடிகானாவுக்கு அருகிலுள்ள கோலிக்கமலே மலை என்பது ஒரு பிரபலமான மலையேற்ற இடமாகும்.
  • தோடிகானாவிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகமண்டலாவின் பாகண்டேசுவரர் கோயில் ஒரு பிரபலமான யாத்திரை இடமாகும்.
  • தேவாரகுந்தி அருவி தோடிக்கானா கிராமத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • தலைக்காவிரி தோடிக்கானாவிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
  • தோடிகானா கோயிலுக்கு தென்கிழக்கில் சில மீட்டர் தொலைவில் மங்களூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான கோயிலுக்கு சொந்தமான 'மீன்குண்டி' என்ற ஒரு இடம் உள்ளது.
  • சல்லியா வட்டத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற கோயிலான மல்லிகார்ஜுனா கோயில் உள்ளது.

மொழி[தொகு]

தோடிகானாவில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் துளு மொழியைப் பேசுகிறார்கள். பிற மொழிகளில் அரே பாசை, கன்னடம், அவ்யக கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவையும் அடங்கும் .

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடிகானா&oldid=3806402" இலிருந்து மீள்விக்கப்பட்டது