உள்ளடக்கத்துக்குச் செல்

தோங்க் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 26°00′N 76°00′E / 26.0°N 76.0°E / 26.0; 76.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோங்க் சவாய் மாதோபூர்
மக்களவைத் தொகுதி
Map
தோங்க் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்இராசத்தான்
மாவட்டம்தோங், சவாய் மாதோபூர்
மக்களவைத் தொகுதி12 - Tonk-Sawai Madhopur
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தோங்க் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி (Tonk–Sawai Madhopur Lok Sabha constituency) என்பது மேற்கு இந்தியாவில் உள்ள இராசத்தான் மாநிலத்தில் உள்ள 25 மக்களவை ( நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும். 2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் வரைமுறை நிர்ணயம் செய்யப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது.[1]

சட்டசபைத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, தோங்க் சவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. இவை:[2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி 2024-முன்னிலை
90 கங்காபூர் சவாய் மாதோபூர் ராம்கேஷ் மீனா இதேகா இதேகா
91 பாமன்வாசு (ப.கு.) இந்திரா மீனா இதேகா இதேகா
92 சவாய் மாதோபூர் கிரோடி லால் மீனா பாஜக இதேகா
93 கந்தர் (ப.இ.) ஜிதேந்திர குமார் கோத்வால் பாஜக இதேகா
94 மால்புரா டோங் கன்ஹையா லால் சௌத்ரி பாஜக பாஜக
95 நிவாய் (ப.இ.) ராம் சகாய் வர்மா பாஜக பாஜக
96 Tonk சச்சின் பைலட் இதேகா இதேகா
97 தியோலி-யுனியாரா ஹரிஷ் மீனா இதேகா இதேகா

2008ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தை அமல்படுத்தியதன் ஒரு பகுதியாக தியோலி உனியாரா சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. கங்காபூர் நகரம், பாமன்வாசு, சவாய் மாதோபூர் மற்றும் கந்தர் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு சவாய் மாதோபூர் தொகுதியிலிருந்தன. மல்புரா, நிவாய் மற்றும் தோங்க் சட்டமன்றப் பகுதிகள் முன்பு தோங்க் தொகுதியிலிருந்தன.

பாராளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் பார்ட்டி
2004 வரை தொகுதி இல்லைt
2004

2009

நமோ நரேன் மீனா இந்திய தேசிய காங்கிரசு
2014 சுக்பீர் சிங் ஜௌனபூரியா பாரதிய ஜனதா கட்சி
2019
2024 ஹரிஷ் சந்திர மீனா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தோங்க் சவாய் மாதோபூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஹரிஷ் மீனா 6,23,763 50.85 +7.64
பா.ஜ.க சுக்பீர் சிங் ஜௌனபூரியா 558,814 45.56 -6.68
பசக பிரகலாத் மாலி 13,144 1.07 -0.82
நோட்டா நோட்டா (இந்தியா) 8,177 0.67
வாக்கு வித்தியாசம் 64,949 5.29
பதிவான வாக்குகள் 1,226,584
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Parliamentary & Assembly Constituencies wise Polling Stations & Electors" (PDF). Chief Electoral Officer, Rajasthan website.
  3. "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024".