தோகா உலக வர்த்தக மையம்

ஆள்கூறுகள்: 25°18′49″N 51°31′06″E / 25.3135°N 51.5183°E / 25.3135; 51.5183
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோகா உலக வர்த்தக மையம்
World Trade Center Doha
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைநிறைவு
வகைவர்த்தக அலுவலகங்கள்
இடம்அல்தஃப்னா, கத்தார்
ஆள்கூற்று25°18′49″N 51°31′06″E / 25.3135°N 51.5183°E / 25.3135; 51.5183
கட்டுமான ஆரம்பம்2010
நிறைவுற்றது2013
உரிமையாளர்கத்தார் பொது ஆயுள்காப்பீடு நிறுவனம்.
உயரம்
அலைக்கம்ப கோபுரம்241 m (791 அடி)
தொழில்நுட்ப விபரங்கள்
மூலப்பொருள்கருங்கற்காரை / எஃகு
தள எண்ணிக்கை51
உயர்த்திகள்27
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)எம்.இசட் & பங்குதாரர்கள்
முதன்மை ஒப்பந்தகாரர்அராப்டெக் கட்டுமான நிறுவனம், துபாய்

தோகா உலக வர்த்தக மையம் (World Trade Center Doha) கத்தார் நாட்டின் அல்தஃப்னா மாவட்டத்தில் அமைந்துள்ள தோகா கடலோரப்பாதையில் கட்டப்பட்டுள்ள 51 மாடி கொண்ட ஓர் அலுவலக கட்டிடமாகும்.[1] இந்த கோபுரம் கத்தார் உலக வர்த்தக மையத்திற்கு சொந்தமானது. 241.10 மீட்டர் (791.0 அடி) உயரமும் 51 தளங்களூம் கொண்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமானம் 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2013 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 99609 சதுரமீட்டர் பரப்பளவில் நான்கு தொகுதிகளாக இக்கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[2]

  1. தொகுதி ஏ:நெடு மேடை. வங்கிகள் கூடம், சில்லறை வணிகப் பகுதி, கண்காட்சி அரங்குகள், என மொத்தம் 37 672 சதுர மீட்டர்.
  2. தொகுதி பி: உயரமான கட்டிடம். மொத்தம் 53 333 சதுர மீட்டர் பரப்பளவில், சுகாதார மன்றம், நீச்சல் குளம், முக்கிய நபர் அலுவலகங்கள், உணவு விடுதி.
  3. தொகுதி சி: கோளம். மொத்தம் 3346 ச.மீ. கருத்தரங்கு அறைகள், தொலைத்தொடர்பு அறைகள், ஊடக தளம் மற்றும் நூலகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  4. தொகுதி டி: தாழ்வான கட்டிடம். மொத்தம் 6258 ச.மீ. வணிக மையம், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் சுகாதார மையம் மற்றும் நீச்சல் குளத்துடன் கூடிய பொழுதுபோக்கு பகுதிகள்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோகா_உலக_வர்த்தக_மையம்&oldid=3833356" இலிருந்து மீள்விக்கப்பட்டது