தொ. கோ. கமலாதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொ. கோ. கமலாதேவி
படிமம்:T.g.kamaladevi.jpg
பிறப்புதொட்ட கோவிந்தம்மாள்
29 திசம்பர் 1930[1]
கார்வேதி நகரம், சித்தூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 ஆகத்து 2012(2012-08-16) (அகவை 81)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்கமலாதேவி, கமலா சந்திர பாபு, ஏ. கமலா சந்திர பாபு
பிள்ளைகள்1

கமலா சந்திர பாபு என்றும் அழைக்கப்படும் டி. ஜி. கமலா தேவி (T. G. Kamala Devi) (பிறப்பு தொட்ட கோவிந்தம்மாள்; 29 திசம்பர் 1930 – 16 ஆகஸ்ட் 2012) ஒரு இந்தியப் பின்னணிக் கலைஞரும், பின்னணிப் பாடகரும், நடிகரும் ஆவார், இவர் முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களில் பங்களித்தார். [2] இவர் இந்திய தொழில்முறை பில்லியர்ட்சு பட்டத்தை இரண்டு முறை வென்ற முன்னாள் தொழில்முறை பில்லியர்ட்சு வீரர் ஆவார். [3]

சுயசரிதை[தொகு]

இவர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் கார்வேதி நகரத்தில் பிறந்தார். இவரது அசல் இயற்பெயர் தொட்ட கோவிந்தம்மாள் என்பதாகும். பின்னர் இவர் திரைத்துறையில் நுழைந்த பின்னர் தனது பெயரை டி. ஜி. கமலா தேவி என்று மாற்றிக் கொண்டார். இவரது பெயரில் உள்ள "டிஜி" (தொ. கோ) என்ற எழுத்துக்கள் இவரது பிறந்த பெயரைக் குறிக்கின்றன. [4] இவர் 1946 இல் அவூலா சந்திர பாபு என்பவரை மணந்தார். தம்பதியருக்கு அவூலா ஜெயச்சந்தர் என்ற மகன் பிறந்தார். [5]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

நடிப்பு[தொகு]

இவர் ஆரம்பத்தில் ஒரு நாடக நிறுவனத்தில் சேர்ந்து சில ஆண், பெண் வேடங்களில் நடித்தார். நாடகங்களில் நடித்ததற்காக இவர் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். பின்னர், இவர் திரைத்துறைக்கு மாறி சுமார் 30 படங்களில் நடித்துள்ளார், அவற்றில் பெரும்பாலானவை சிறிய பாத்திரங்களேயாகும். இவர் பல நாடகங்களிலும் நடித்த ஒரு பிரபலமான மேடை நடிகையாகவும் இருந்தார்.

பின்னணிக் கலைஞர்[தொகு]

இவர் ஒரு பிரபலமான பின்னணிக் கலைஞராகவும் இருந்தார். பத்மினி, சரோஜாதேவி, லலிதா போன்ற பல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். [4]

கோல் விளையாட்டு[தொகு]

கமலா இந்தியாவின் ஆரம்பகால பெண்கள் கியூ விளையாட்டு வீரர்களில் ஒருவர். 1954 ஆம் ஆண்டில் ஆந்திர மகா சபையின் அழைப்பின் பேரில் அப்போதைய ஆளும் இசுனூக்கர் உலக வாகையாளரான ஹொரேஸ் லிண்ட்ரம் சென்னைக்கு வந்தபோது, அவருடன் இவர் விளையானார் . [6] விரைவில், இவர் மாநில, தேசிய அளவிலான போட்டிகளுக்குச் சென்றார். அப்போதிருந்து, இவர் பில்லியர்ட்சு & இசுனூக்கரில் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த நேரத்தில் ஒரே பெண் வீரராக, சென்னை, விஜயவாடா, பெங்களூர் போன்றா ஊர்களில் ஆண்களுடன் போட்டியிட்டார். இவர் 1991, 1995 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய பில்லியர்ட்சு பெண்கள் பட்டங்களை வென்றுள்ளார். [7] அப்போதைய உலக பில்லியர்ட்சு வாகையாளர் பாப் மார்ஷலுடன் பெங்களூரு, மைசூர் ஆகிய இடங்களில் நடந்த காட்சி போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவர் தனது 62 ஆவது வயதிலும், 66 வயதிலும் தனது பில்லியர்ட்சு தேசிய பட்டங்களை வென்றார்.

விருதுகள்[தொகு]

 • "நாடக கலா பிரபூர்ணா" விருது - இவருக்கு ஆந்திர மாநில நாடக அகாதமி வழங்கியது.

தலைப்புகள்[தொகு]

 • தேசிய பில்லியர்ட்சு வாகையாளர்: 1991, [8] 1995

இறப்பு[தொகு]

சிறுது காலம் நோய்வாய் பட்டிடிருந்த இவர் 16 ஆகஸ்ட் 2012 அன்று சென்னையில் இறந்தார். [9]

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2014-07-14 அன்று பரணிடப்பட்டது.
 2. "T G Kamala Devi". Maa TV.
 3. "A. Kamala Chandra Babu passed away". Cue Sports India.
 4. 4.0 4.1 "T G Kamala Devi". Maa TV."T G Kamala Devi". Gurthukostunayyi. Maa TV. Retrieved 13 June 2013.
 5. "Actress cum playback singer T G Kamala Devi dies at 83".
 6. Ninan, Susan (12 November 2011). "A champion lost in her own world". மூல முகவரியிலிருந்து 3 January 2013 அன்று பரணிடப்பட்டது.
 7. "Former cue sport player Kamala Chandra Babu passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 August 2012. Archived from the original on 3 ஜனவரி 2013. https://archive.today/20130103093300/http://articles.timesofindia.indiatimes.com/2012-08-17/snooker-billiards/33248595_1_billiards-and-snooker-world-billiards-champion-bangalore-and-mysore. பார்த்த நாள்: 29 August 2012. 
 8. M. L. Narasimham (18 August 2012). "A woman of many talents". தி இந்து. Archived from the original on 21 January 2020. https://archive.today/20200121151952/https://www.thehindu.com/features/cinema/a-woman-of-many-talents/article3790938.ece. பார்த்த நாள்: 21 January 2020. 
 9. "Actor, singer Kamala Devi passes away". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/channels/cities/hyderabad/actor-singer-kamala-devi-passes-away-886. பார்த்த நாள்: 17 August 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொ._கோ._கமலாதேவி&oldid=3217522" இருந்து மீள்விக்கப்பட்டது