தொழுநை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொழுநை என்பது யமுனை ஆற்றைக் குறிக்கத் தமிழாக்கம் செய்யப்பட்ட சொல்.

கதை
யமுனை ஆற்றில் குளித்த இளம்பெண்களின் சேலையைத் திருடிக்கொண்டு மரத்தில் ஏறிக்கொண்டான் என்னும் கதை ஒன்று உண்டு.
தமிழர் பண்பாடு
இந்தக் கதையை வேறு வகையாகத் தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.
கண்ணன் மகளிர்க்குத் தழையாடை தந்தான் என்று அது குறிப்பிடுகிறது.
கண்ணன் செயலைத் தமிழர் பண்பாட்டு நெறியில் அது கூறுகிறது.
தலைவன் பிரிவை எண்ணித் தலைவி கலங்குகிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள்.
தலைவன் சென்றிருக்கும் நாட்டில் களிறு யாம் என்னும் மரத்தின் மடல் இலைகளைப் பிடித்து வளைத்துத் தன் பிடி உண்ண ஊட்டுமாம். அப்போது அதன் கண்களில் மொய்க்கும் மிஞிறு என்னும் ஈக்களை அந்த இலைகளால் விசிறி ஓட்டுமாம்.
இப்படிக் களிறு பிடிக்கு உதவுவதைத் தலைவன் பார்ப்பானாம். தன் மனைவியை நினைந்து விரைந்து திரும்புவானாம்.
உவமை
யானை யாஅம் தழைகளை வளைத்துத் தருவது போலக் கண்ணன் குளித்துக்கொண்டிருந்த அண்டர் மகளிர்க்கு (ஆய்ச்சியர்க்கு) தழையாடை உடுத்தத் தந்தானாம். [1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. வடாஅது வருபுனல் தொழுநை வருபுனல் அகன்துறை அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் மரம் செல மிதித்த மாஅல் போலப் புன்தலை மடப்பிடி உணீஇயர் அம்குழை நெடுநிலை யாஅம் ஒற்றி நனைகவுள் படிஞிமிறு கடியும் களிறே – மதுரை மருதன் இளநாகனார் பாடல் அகநானூறு 59.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழுநை&oldid=891455" இருந்து மீள்விக்கப்பட்டது