தொழில் நுட்பக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தொழில் நுட்பக் கல்வி[தொகு]

கர்சன் பிரபு (Lord Curzon)

இந்தியாவில் காணப்படும் பல குறைகளை நீக்குவதற்குத் தொழிற்கல்வி இன்றியமையாததாகிறது. தொழிலின் திறமையும் வாழ்வில் அறமுடையவர்களாக மக்களை ஆக்க வேண்டும். நாட்டின் வாழ்வை உருவாக்கும் பொறுப்பு மக்களுடையது. எல்லா மக்களுக்கும் சமத்துவமான உரிமையளிக்கக்கூடிய ஜனநாயக சமுதாயத்தை உருவாக்குவதற்கு வேண்டிய கல்வித்திட்டங்களை வகுத்தல் வேண்டும். ஆதலால், திறமையுள்ள தொழிலாளிகளும், புதிதாக கண்டுபிடிக்கும் ஆற்றலுடைய அறிஞர்களும், புதிய கருத்தை ஏற்று நடத்தும் முதலாளிகளும் வேண்டும். இந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்குத் தொழில் நுட்பக்கல்வி பயன்படுகிறது.

அறிஞர்களின் கூற்று[தொகு]

ஏதேனும் ஒருவகைத் தொழிலோ, குடிசைத் தொழிலோ செய்வதற்குத் தக்க கல்வியே தொழில்நுட்பக் கல்வி என்று கர்சன் பிரபு (Lord Curzon) கூறினார். தொழில்நுட்பக் கல்வி என்பது நிலைமைக்குத் தக்கவாறு அமையக் கூடிய ஆற்றலுடையதாக இருக்க வேண்டும் என்று கூரி (Courie) என்னும் அறிஞர் கூறுகிறார்.

வேறு பெயர்கள்[தொகு]

கைத் தொழில்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்கும் கல்வி, தொழிற்கல்வி என்றும், பொறியியல் போன்ற தொழில்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்கும் கல்வி என்றும் பெயர்பெறும். நாகரிக வாழ்வுக்கு வேண்டிய பொருள்களை உண்டாக்குவதற்கான கருவிகளைப் பயன்படுத்தும், பயிற்சி அளிக்கும் கல்வியை அமெரிக்க நாட்டினர் கைத்தொழிற் கல்வி என்று கூறுவர்.

நோக்கம்[தொகு]

1) திறமையுடைய தொழிலாளர், 2) சாமர்த்தியமுள்ள கண்காணிப்போர், 3) ஆராய்ச்சி நிபுணர்கள் ஆகிய மூன்று வகையினரை உருவாக்குவதே தொழில் நுட்பக் கல்வியின் தலையாய நோக்கமாகும்.

தேவை[தொகு]

தொழில் நுட்ப நிபுணர்கள் மட்டுமின்றித் தொழில்செய் திறமையுடைய தொழிலாளர்களும் நாளுக்குநாள் அதிகமாகத் தேவைப்பட்டு வருகின்றனர். தொழில்நுட்பக் கல்வியைத் தக்க முறையில் தர வேண்டுமாயின் பொதுக்கல்வியும் தக்க முறையில் தரப்பட வேண்டியது இன்றியமையாததாகும். சமுதாயத்தில் எல்லோரும் சம உரிமையுடையவர். அதனால் மனிதனுடைய ஆற்றல்கள் அனைத்தையும் வளர்ர்க்கத்தக்க கல்வி சமுதாய மக்கள் அனைவர்க்கும் அளிக்கப்பட வேண்டியதாகும். இந்த உண்மையை உணர்ந்து இந்திய அரசாங்கமும் மக்களும் தொழில் நுட்பக் கல்வியை வளர்க்க முன்வந்துள்ளனர். இந்தக் கருத்திற்கேற்ப நாட்டில் தொழில் நுட்பப் பள்ளிகளும், ஆராய்ச்சி நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் தொழில் தேவைகளை அடிக்கடி ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு தொழில் நுட்பக் கல்வி முறையில் மாறுதல்கள் காணப்பட்டு வருகின்றன.

[1] [2]

[3]

  1. கலைக்களஞ்சியம் தொகுதி ஆறு
  2. "Technology in Education: An Overview - Education Week". www.edweek.org. Retrieved 2016-10-31.
  3. Al Januszewski A.; Molenda Michael. (2007) Educational Technology: A Definition with Commentary ISBN 978-0805858617
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்_நுட்பக்_கல்வி&oldid=2446345" இருந்து மீள்விக்கப்பட்டது