உள்ளடக்கத்துக்குச் செல்

தொழில்நுட்ப உதவி மோசடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழில்நுட்ப உதவி மோசடி உதாரணம்

தொழில்நுட்ப உதவி மோசடி ( Technical Support Scam ) என்பது தகவல் தொடர்பு துறையில் நடைபெறும் ஒரு வகை மோசடி முறையாகும்[1]. இதில் மோசடி செய்பவர்கள் தங்களை கணினி நிறுவனம் அல்லது மென்பொருள் நிறுவனம் சார்ந்த நிபுணர்கள் என்று கூறி மக்களிடம் தொடர்பு கொள்கின்றனர். அவர்கள் கணினி பாதிக்கப்பட்டுள்ளது அல்லது தீங்கிழைக்கும் நிரல் புகுந்துள்ளது என்று போலியான எச்சரிக்கைகளை வழங்குகின்றனர். பெரும்பாலும் தொலைபேசி அழைப்புகள், இணைய தளங்களில் தோன்றும் எச்சரிக்கை செய்திகள் அல்லது மின்னஞ்சல் வழியாக இத்தகைய தொடர்புகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் போலியான இணைய தளங்கள் உருவாக்கி பயனர்களை குழப்புகின்றனர்.

இத்தகைய மோசடியில் சிக்கியவர்கள் தங்கள் கணினியை தொலைவிலிருந்து அணுக அனுமதி வழங்கும் நிலைக்கு செல்ல நேரிடலாம். அப்பொழுது மோசடிகள் கணினியில் போலியான பிரச்சினைகளை காட்டி, தீர்க்கும் பெயரில் பணம் கேட்கின்றனர். சில நேரங்களில் தேவையற்ற மென்பொருட்கள் விற்கப்படுகின்றன அல்லது சந்தா கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மேலும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களும் அபாயத்திற்கு உள்ளாகின்றன.

இம்மாதிரி மோசடிகள் பல்வேறு நாடுகளில் பரவலாகப் பதிவாகியுள்ளன. பல அரசு அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் இத்தகைய மோசடிகளை பற்றி மக்களை எச்சரித்து வருகின்றன. உண்மையான தொழில்நுட்ப நிறுவனங்கள் இவ்வாறு எதிர்பாராத அழைப்புகள் அல்லது எச்சரிக்கை செய்திகள் மூலம் தொடர்பு கொள்ளாது என்பதும் பொதுவாக வலியுறுத்தப்படுகிறது. தொழில்நுட்ப உதவி மோசடி என்பது இணைய குற்றத்தின் ஒரு பகுதி ஆகும் மற்றும் மக்கள் விழிப்புணர்வு கொண்டிருப்பதே இதைத் தடுக்கும் முக்கியமான வழியாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் பணம் கொடுக்க மறுத்தால், மோசடி செய்பவர்கள் மிரட்டல், அச்சுறுத்தல், அல்லது கணினியை முடக்கி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். ஒரு ஆய்வு அறிக்கையின்படி, கணினி மோசடிகளுடன் தொடர்புடைய எண்பத்தி ஐந்து சதவீத ஐ.பி. முகவரிகள் இந்தியாவில் இருந்து வந்தவை. அமெரிக்காவில் ஏழு சதவீதமும், கோஸ்டாரிக்காவில் மூன்று சதவீதமும் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Protect-Yourself-from-Tech-Support-Scams, Microsoft.com". Retrieved 2025-08-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்நுட்ப_உதவி_மோசடி&oldid=4466243" இலிருந்து மீள்விக்கப்பட்டது