உள்ளடக்கத்துக்குச் செல்

தொழில்சார் மன அழுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொழில்சார் மனழுத்தம் பற்றிய நிகழ்படம் (இதனையும் காண்க: Part 2)

தொழில் சார்ந்த மன அழுத்தம் (Occupational stress) என்பது ஒருவரின் தொழில் தொடர்பான உளவியல் அழுத்தமாகும் . வேலையில் உள்ள மன அழுத்த சூழ்நிலைகள் என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அந்த நிலைமைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதன் மூலம் தொழில் சார்ந்த மன அழுத்தத்தை நிர்வகிக்க முடியும். [1] பணியாளர்கள் தங்களது மேற்பார்வையாளர்கள் அல்லது சக பணியாளர்களால் தங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று நினைக்கும்போதோ அல்லது அவர்கள் செய்யும் வேலையின் மீது அவர்களுக்கு கொஞ்சம் கட்டுப்பாடு இருப்பதாக அல்லது கட்டுப்பாடான சூழ்நிலைகளில் வேலை செய்வதாக உணரும்போது அல்லது வேலையில் அவர்கள் எடுக்கும் முயற்சிகள் வேலைக்கான வெகுமதிகளுடன் ஒத்துப்போகவில்லை என உணரும்போது தொழில்சார் மன அழுத்தம் ஏற்படலாம். [2] தொழில் சார்ந்த மன அழுத்தம் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இருவருக்கும் கவலை அளிக்கிறது, ஏனெனில் மன அழுத்தம் நிறைந்த வேலைகள் ஊழியர்களின் மனநலன், உடல் ஆரோக்கியம் மற்றும் வேலை செயல்திறன் ஆகியவற்றுடன் தொடர்புடையது. [3] உலக சுகாதார அமைப்பு மற்றும் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு நடத்திய ஓர் ஆய்வில், அதிக நேரம் வேலை பார்ப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் முக்கியக் காரணியாகும். 2016இல் 7,45,000 தொழிலாளர்கள் குருதி ஊட்டக்குறை இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[4]

சான்றுகள்

[தொகு]
  1. Quick, James Campbell; Henderson, Demetria F. (May 2016). "Occupational Stress: Preventing Suffering, Enhancing Wellbeing †". International Journal of Environmental Research and Public Health 13 (5): 459. doi:10.3390/ijerph13050459. பன்னாட்டுத் தர தொடர் எண்:1661-7827. பப்மெட்:27136575. 
  2. "Stress at the workplace". WHO.
  3. Sulsky, L. & Smith, C. (2005). Work Stress. Belmont, CA: Thomson Wadsworth.[page needed]
  4. Pega, Frank; Nafradi, Balint; Momen, Natalie; Ujita, Yuka; Streicher, Kai; Prüss-Üstün, Annette; Technical Advisory Group (2021). "Global, regional, and national burdens of ischemic heart disease and stroke attributable to exposure to long working hours for 194 countries, 2000–2016: A systematic analysis from the WHO/ILO Joint Estimates of the Work-related Burden of Disease and Injury". Environment International 154: 106595. doi:10.1016/j.envint.2021.106595. பன்னாட்டுத் தர தொடர் எண்:0160-4120. பப்மெட்:34011457. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழில்சார்_மன_அழுத்தம்&oldid=3623296" இலிருந்து மீள்விக்கப்பட்டது