தொழிலும் தொழில் வல்லுனர்களும் (தமிழ்ப் பெயர்கள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பட்டியல் சாதிகளின் பட்டியல் இல்லை. சாதிப்பெயர்களும் தொழில் பெயர்களும் ஒன்றாக இருப்பது தமிழ் சமூகத்தில் காணக்கூடிய ஒரு இயல்பு. குறிப்பிட்ட இடுகைகளுக்கு ஆட்சோபனை இருக்கும் பட்சத்தில் உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். நன்றி.

தொழிலும் தொழில் வல்லுனர்க்ளும் (தமிழ்ப் பெயர்கள்)
தொழில் வல்லுனர் பெயர்கள் தொழில்
கம்மியர் கப்பற்கலை, தமிழர் கப்பற்கலை
நிரலாளர் நிரலாக்கம்
கொல்லர் உலோகங்களில் பொருட்களை செய்பவர்கள்
தச்சர், தச்சன், மரவேலையாளர் மரவேலை
நெசவாளர் நெசவுத் தொழில்நுட்பம்
தட்டார் பொன் ஆபரணங்கள் செய்பவர்கள்
மண்ணாளர்கள் மண் கொண்டு சிற்பம் செய்பவர்கள்
உழவர், உழத்தி, உழவன் பள்ளர் வேளாண்மை அல்லது விவசாயம் செய்பவர்கள்
எயினர், வேடர் வேட்டை
நடிகர், நடிகை, நடிகன் நடிப்பு
சண்டாளர் பிணம் புதைத்தல், தண்டனை நிறைவேற்றல்
பொறியியலாளர் பொறியியல்
ஆயர், ஆய்ச்சி, இடையர்,கோகுலம்,யாதவர்,கோனார். பால் & பால் பண்ணை தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள்
மருத்துவர் ஆங்கில மருத்துவர் பொதுவான உடல்சார் நோய்களைக் கண்டறிந்து பரிகாரம் ஔடதம் செய்தல்
பல் பல்,பல் சுகாதாரம் பற்றிய பிரச்சினைகளை
கால்நடை/மிருக கால்நடைகளுக்கான நோய்கள், சுகாதார பிரச்சினைகளை தீர்த்தல்
அறுவைச் சிகிச்சை சில நோய் நிலைமைகளின் போது சத்திரசிகிச்சை மூலம் பரிகாரம் காணல்
நாட்டு/சித்த மூலிகை மருந்துகள் மூலம் பிணிகளை தீர்த்தல்
ஆயுர்வேத ஆயுர்வேத மருத்துவ முறை மூலம் பிணிகளை தீர்த்தல்
யுனானி யுனானி மருத்துவ முறை மூலம் பிணிகளை தீர்த்தல்
வழக்கறிஞர் சட்ட வழிமுறைகளுக்கேற்ப வாக்காடல்.
அரசியல்வாதி அரசு அலகுகளை மக்கள் சார்பாளாராக கட்டமைத்து நிர்வாகித்தல்.
கணக்காளர் ஒரு அமைப்பின் அல்ல தனிப்பட்டவரின் வரவு செலவுகளைக் கணிக்கில் வைப்பவர்.
ஓவியர் ஓவியம் வரைபவர்.
பாடகர் பாடல்களை பாடுபவர்.
விளையாட்டு வீரர் விளையாட்டுகளில் சிறப்பாக பங்கேற்ககூடியவர்.
விண்ணோடி விண்வெளி செல்வோர்
வானோடி வானூர்து ஓட்டுவோர்
வண்ணார் ?? துணி துவைப்போர்
குறவர், குறத்தி பாட்டு, குறிசொல்லுதல், மலைபடு திரவியங்கள் விற்றல்


வெளி இணைப்புகள்[தொகு]