உள்ளடக்கத்துக்குச் செல்

தொழிலாளர் கூட்டுறவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழிலாளர் கூட்டுறவு (Worker cooperative) என்பது தனது தொழிலாள-உரிமையாளர்களால் நிர்வகிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் கூட்டுறவு நிறுவனம் ஆகும். மரபான கூட்டுறவு கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த அமைப்புக்கான கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் கூட்டுறவில் வெளியாள், நுகர்வோர் எவருக்கும் நிர்வாக உரிமையோ, சொத்துரிமையோ கிடையாது. அங்கு பணியாற்றும் தொழிலாளர் மட்டுமே அத்தொழிற்றுறையின் பங்குகளை வைத்திருப்பர். உறுப்பினர் ஒருவருக்கு ஒரேயொரு உறுப்புரிமைப் பங்கே வழங்கப்படக்கூடும். ஒரு உறுப்புரிமைப் பங்கு = ஒரு வாக்கு. நிறுவனத்தில் தொழிலாற்ற உறுப்புரிமை ஒரு நிபந்தனை அல்ல. ஆனால், உறுப்புரிமை பெறுவதற்கு, அந்நிறுவனத்தின் தொழிலாளியாக இருப்பது கட்டாய நிபந்தனை.

இத்தகைய தொழிலாளர் கூட்டுறவு இயக்கங்களுக்கு உதாரணங்களாக,


  • தொழிலாளர் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடிகளால் ஆரம்பிக்கப்பட்டு பாஸ்க் நாட்டில் வெற்றிகரமாக இயங்கிவரும் மொன்ட்றாகன் (Mondragón) தொழிலாளர் கூட்டுறவு இயக்கம்
  • புகழ்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுள் ஒருவரான ஏ. கே. கோபாலன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவரும் Indian Cofee House

என்பனவற்றை கூறலாம்.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொழிலாளர்_கூட்டுறவு&oldid=3349245" இலிருந்து மீள்விக்கப்பட்டது