தொழிலாளர்கள், சங்ககால மதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்ககாலத்தில் மதுரையில் வாழ்ந்த கலைத்தொழிலாளர்களைப் பற்றி மதுரைக்காஞ்சி என்னும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. இவர்கள் அனைவரையும் கம்மியர் என்னும் பெயரால் அது சுட்டுகிறது. இந்தக் கம்மமாகிய கலைத்தொழிலில் பெரியவர்களும், சிறியவர்களும் ஈடுபட்டிருந்தனராம். (வடக்குத் தெரு, தெற்குத் தெரி, கிழக்குத் தெரு, மேற்குத் தெரு என வகைபட்டிருந்த) நால்வேறு தெருக்களிலும் அவர்கள் தம் கம்மத் தொழிலைச் செய்துவந்தனர். அவர்களில் சிலர் தெருக்களில் குடைக்கால் நிறுத்தி அதன் நிழலில் கால் கடுக்க நின்றுகொண்டே பணியாற்றிவந்தனர்.[1]

 • சங்கை அறுத்து வளையல் செய்பவர்கள்
 • மணியில் துளையிட்டு மணிமாலையாகக் கோத்துத் தருபவர்கள்
 • பொன்னைச் சுட்டு அணிகலன்ஃகள் செய்து தருபவர்கள்
 • விற்பனைக்கு வரும் பொன்னை உரைத்துப் பார்த்துத் தரம் காண்பவர்கள்
 • ஆடைகளைச் சுமந்துசென்று விலை கூறி விற்பவர்கள்
 • செம்பாலான பொருள்களை நுறுத்துச் சொல்பவர்கள்
 • துணியை மகளிரின் மார்பணிகளாகத் தைத்துத் தருகவர்கள்
 • பூ விற்போர்
 • (சூடம், சாம்பிராணி, ஊதுபத்தி முதலான) புகையும் நறுமணப் பொருள்களை விற்பவர்கள்
 • (விற்பனைக்கு வரும் பொருள் எதுவாயினும் அதன் தரத்தை) ஆராய்ந்து மக்களுக்குச் சொல்பவர்கள்
 • எந்தப் பொருளாக இருந்தாலும் அதனைப் போலவே உவமப் பொருளாக்கி ஓவியகாகவும், சிலைகளாகவும் வடித்துத் தரும் கண்ணுள்-வினைஞர்


அடிக்குறிப்பு[தொகு]

 1. கோடு போழ் கடைநரும், திரு மணி குயினரும்,
  சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும்,
  பொன்னுரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்,
  செம்பு நிறை கொண்மரும், வம்பு நிறை முடிநரும்,
  பூவும் புகையும் ஆயும் மாக்களும், 515
  எவ் வகைச் செய்தியும் உவமம் காட்டி,
  நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
  கண்ணுள் வினைஞரும், பிறரும், கூடி,
  தெண் திரை அவிர் அறல் கடுப்ப, ஒண் பல்
  குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து, 520
  சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ,
  நால் வேறு தெருவினும், கால் உற நிற்றர