தொல் ஏரி பறவைகள் சரணாலயம்
| தொல் ஏரி பறவைகள் சரணாலயம் | |
|---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
பிளமிங்கோ பறவைகள் தொல் ஏரி | |
| அமைவிடம் | இந்தியாவில் குசராத்தில் மெக்சனா மாவட்டம் |
| நிறுவப்பட்டது | 1988 |
தொல் ஏரி பறவைகள் சரணாலயம் (Thol Lake Bird Sanctuary) இந்தியாவின் வடக்குக் குசராத்தில் உள்ள மெக்சானா மாவட்டத்தில் உள்ளது.[1] குசராத்தில் உள்ள முக்கிய ஈரநிலங்களில் இதுவும் ஒன்றாகும். தொல் ஏரியைச் சுற்றி தொல் ஏரி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.[2] புலம்பெயர்ந்து வரும் பறவைகளின் புகலிடமாகவும் இச்சரணாலயம் உள்ளது. 1988 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் படியும் 1972-இன் சட்டப் பிரிவு 18 இன் கீழும் இது சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[3] 2001 ஆம் ஆண்டில் இந்த ஏரியானது இராம்சர் தலமாக அறிவிக்கப்பட்டது.[4] இத்தலம் 6.49 எக்டேர் பரப்பளவைக் கொண்டது. 2013 ஆம் ஆண்டில் 0.308 கி.மீ முதல் 2.244 கி.மீ வரை பல்வேறு இடங்களில் நீண்டுள்ள இதன் சுற்றியுள்ள பகுதிகள் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டன.[5]
பறவையினங்கள்
[தொகு]இச்சரணாலயமானது பறவைகள் மத்திய ஆசியாவிற்குச் செல்லக்கூடிய பறக்கும் பாதையில் அமைந்துள்ளது. 320 வகைகளுக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கு வந்து செல்கின்றன. இதில் 30 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பறவைகள் அழிந்து வரக்கூடிய நீர்ப்பறவை இனங்கள் அடங்கும்.[4]
- மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள வெண்முதுகுக் கழுகு மற்றும் சோசியல் லேப்விங் பறவை:
- பாதிக்கப்டக்கூடிய சாரசு கொக்கு, களியன் மற்றும் சிறிய வெள்ளை முன் வாத்து.
- ஆர்க்டிக்கு மற்றும் சைபீரியாவிலிருந்து வந்த சிவப்பு மார்பு வாத்தும் சரணாலயத்தில் காணப்படுகின்றன.[6]
சிக்கல்கள்
[தொகு]இச்சரணாலயத்தின் புகழ் மக்களிடையே பரவி வருவதால் நாள்தோறும் பறவை பிரியர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்தபடி உள்ளனர். இவர்களின் வசதிக்காக ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோத உணவகங்கள் உருவாகியுள்ளன். அவைகள் கழிவு நீரை வெளியேற்றுகின்றன. இப்பகுதியைச் சுற்றி புதிதாகக் கட்டப்பட்ட வீட்டுவசதி சங்கங்களும் சரியான கழிவு நீர் வலையமைப்பு இல்லாததால் அனைத்தும் ஏரியில் கலந்து ஏரியை மாசுசுபடுத்துகின்றன.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "થોળ પક્ષી અભ્યારણ્ય પર તાલુકા પશુ ચિકિત્સકો ની સતત નજર". www.gujaratsamachar.com (in குஜராத்தி). Retrieved 2024-07-28.
- ↑ "Gujarat: Statewide count this Dec-Jan to assess population of waterbirds, identify wetlands". The Indian Express (in ஆங்கிலம்). 2023-12-07. Retrieved 2024-07-28.
- ↑ "Surprising yet true! Visit these little known places which make Gujarat a bird watcher's paradise". Financialexpress (in ஆங்கிலம்). 2019-04-19. Retrieved 2024-07-28.
- 1 2 "Four new Ramsar wetland sites recognised in India". Hindustan Times. 15 August 2021. https://www.hindustantimes.com/india-news/four-new-ramsar-wetland-sites-recognised-in-india-101628965266784.html.
- ↑ "Stretches from 0.3 km to 2.24 km from boundary of Thol". The Times of India. 2013-11-13. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/stretches-from-0-3-km-to-2-24-km-from-boundary-of-thol/articleshow/25690247.cms.
- ↑ "Back again: Migratory flocks, two lone birds". The Times of India. 2023-12-15. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/back-again-migratory-flocks-two-lone-birds/articleshow/106006397.cms.
- ↑ "Gujarat: Sewage pollutes Thol, Ramsar tag under threat". The Times of India. 2022-10-04. https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/gujarat-sewage-pollutes-thol-ramsar-tag-under-threat/articleshow/94629828.cms.