உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்லியல் அருங்காட்சியகம், ஹளபீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், ஹளபீடு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் கள அருங்காட்சியகம் ஆகும். இது 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் ஹளபீட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்து பெறப்பட்ட 1500க்கு மேற்பட்ட அரும்பொருட்கள் உள்ளன. இவற்றுள் சிற்பங்கள், கட்டிடக் கூறுகள், கல்வெட்டுக்கள் போன்ற வரலாற்றுச் சிறப்புக் கொண்ட பொருட்கள் அடங்கும். இவை ஒரு மூடிய காட்சிக் கூடத்திலும், ஒரு திறந்தவெளிக் காட்சிக்கூடத்திலும் வைக்கப்பட்டுள்ளன. சமணத் தீர்த்தங்கரர் ஒருவரின் 18 அடி உயரச் சிலையொன்றும் இங்கு உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]