தொல்லியல் அருங்காட்சியகம், ரோப்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்லியல் அருங்காட்சியகம், ரோப்பார், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரோப்பார் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது சண்டிகாரில் இருந்து ரூப்நகருக்குச் செல்லும் சாலையில் சண்டிகாருக்கு வடகிழக்கில் 40 கிலோமீட்டர் தொலைவில், சட்லஜ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது 1998 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.

ரோப்பாருக்கு அருகாமையில் உள்ள அரப்பா காலத்துத் தொல்லியல் களத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த அரும் பொருட்களை வைப்பதற்காக இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. விடுதலை பெற்ற இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் அரப்பா காலத் தொல்லியல் களம் இதுவேயாகும். இங்கு இடம்பெற்ற அகழ்வாய்வுகள் அரப்பா காலம் முதல் மத்திய காலம் வரையிலான பண்பாட்டுத் தொடர் கண்டறியப்பட்டது.

இந்த அருங்காட்சியகத்தில் அரப்பா காலத்து அரும்பொருட்களுடன், நிறந்தீட்டிய சாம்பல் பாண்டப் பண்பாட்டுக் காலம், சகர்கள் காலம், மௌரியர் காலம், குசாணர் காலம், குப்தர் காலம் ஆகியவற்றைச் சேர்ந்த பொருட்களும் உள்ளன. மாவுக்கல் முத்திரைகள்; செப்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களில் செய்யப்பட்ட கருவிகள்; சந்திர குப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள் என்பன இங்குள்ள காட்சிப் பொருட்களுள் அடங்குகின்றன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]