தொல்லியல் அருங்காட்சியகம், தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொல்லியல் அருங்காட்சியகம், தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி என்பது தமிழ்நாட்டின், நாகப்பட்டிணம் மாவட்டம் பொறையாரில் உள்ள பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் உள்ள ஒரு தொல்லியல் அருங்காட்சியகமாகும்.

இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாம், இந்த கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்களால் சுற்றுவட்டாரத்தில் நடத்தப்பட்ட கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்டவை ஆகும். ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலத்தில் உள்ள தில்லையாடி, தலைச்சங்காடு, தி.மணல்மேடு, காரைக்கால் மாவட்டம் மாதூர் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வரலாற்றுத்துறை மாணவர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதிகளில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்களான முதுமக்கள் தாழி, ஈமக்கிரியை தாழி, அந்தத் தாழிகளில் இருந்த மண்டை ஓடுகள், எலும்புத் துண்டுகள், மட்பாண்டங்கள், கீறல் குறியீடுகளுடன் கூடிய மட்பாண்டங்கள், இரும்பினாலான சிறிய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும் புதிய கற்கால, இரும்பு கால மட்பாண்டங்களும் கண்டறியப்பட்டன. அவற்றைத் திரட்டி 2002 இல் இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. வீ. தமிழன்பன் (2018 மார்ச் 10). "அருங்காட்சியகம் அடைகாக்கும் ‘பேய் குமுட்டி’". செய்திக் கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 3 ஏப்ரல் 2018.