தொலைநுண்ணுணர்வின் ஆரம்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொலைநுண்ணுணர்வின் ஆரம்பம் புகைப்படங்கள்,தொலை நுண்ணுணர்வு நுட்பத்தின் ஆரம்பமாகும்.

மேப்பியலாளர்கள்[தொகு]

வான்வழிப் புகைப்படங்களை பயன்படுத்தி வரைப்படம் வரைந்தனர்..1858-ஆம் ஆண்டு பிரெஞ்சு மேப்பியலாளர்கள் பலூன்களையும் புகைப்படக் கருவிகள் பொருத்ப்பட்ட விமானங்களையும் பயன்படுத்தி நிலத்தோற்றங்களை சாய்கோணத்தில் படம் பிடித்தனர்.மேப்பியலாளர்கள் வேறு வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்து குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பரப்பினை சரியான விவரங்களை கொண்ட வரைபடங்களை உருவாக்கும் நிலை பெற்றிருந்தனர்.வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட படங்களை ஒப்பிட்டு சரியான அளவைகளை தீர்மானிக்கின்ற முறைக்கும் புகைப்பட அளவை என்று பெயர்.

வான்வழி படங்கள்[தொகு]

வான்வழி படங்களை பயன்படுத்தி வரையப்படுகின்ற நிலவரைப்படங்கள் அல்லது மேப்பிற்கு செங்குத்து வரைபடங்கள் எனப்படுகின்றன.1960 களில் தொலை நுண்ணுணர்வு நுட்பத்துறையில் செயற்கைக்கோளை பயன்படுத்தியபின் ஒரு புரட்சி ஏற்பட்டது. செயற்கைக்கோளின் உயரத்திலிருந்து புவியின் பெரும் பரப்பை புகைப்படம் எடுக்க முடிகிறது .முதல் வானிலை செயற்கைக்கோள் அமெரிக்கா ஐக்கிய நாட்டு அரசால் விண்ணில் ஏவப்பட்டது.1970 ஆம் ஆண்டு புவி வள நுட்ப செயற்கைக்கோள் ஏவப்பட்டதின்மூலம் தொலை நுண்ணுணர்வு நுட்பத்துறையில் இரண்டாவது புரட்சி ஏற்பட்டது .1975 இல் இதன் தொடர்ச்சி லெண்ட்சாட் என பெயரிடப்பட்டது. செயற்கைக்கோளை தொலை நுண்ணுணர்வு நுட்பத்துறையில் பயன்படுத்திய பின் தனியார் நிறுவனங்களும் தங்கள் கருவிகளை விண்ணில் ஏவத் தொடங்கின.1986 இல் பிரெஞ்சு நாட்டின் ஸ்பாட் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டு 10 மில்லியனுக்குமேல் பதிமங்களை எடுத்துள்ளன

[1]

  1. . பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம்.