தொய்வாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொய்வாலா என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள தேராதூன் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகர் பஞ்சாயத்து ஆகும்.

புவியியல்[தொகு]

தொய்வாலா 30.18 ° வடக்கு 78.12 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 485 மீட்டர் (1,591 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. இந்த இடம் தூன் பள்ளத்தாக்கின் தேராய் மற்றும் பபார் பிராந்தியத்தின் கீழ் வருகிறது. இந்த நகரம் உத்தராகாண்டம் மாநிலத்தின் மூன்று முக்கியமான பெருநகர பகுதிகளான தேராதூன் , ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆகியவற்றினால் உருவாக்கப்பட்ட கலாச்சார முக்கோண மையத்தின் அருகில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று பகுதிகளையும் தொய்வாலா நகரில் இருந்து ஒரு மணி நேர பயணத்திற்குள் அடையலாம்.

காலநிலை[தொகு]

தொய்வாலா மிதமான காலநிலையைக் கொண்டது. இருப்பினும் இங்கு கோடைகாலத்தின் கடும் வெப்பமும், குளிர்காலத்தில் கடும் குளிரும் ஏற்படும்.   தொய்வாலாவின் வெப்பநிலை 0 °C (32 °F) க்குக் கீழே விழுவது அரிதாகவே அறியப்படுகிறது. கோடைக் கால வெப்பநிலை 43 °C (109.4 °F)  எட்டக்கூடும்.[2] அதே நேரத்தில் குளிர்கால வெப்பநிலை −0.5 °C (31.5 °F) வரை குறையக்கூடும்.[3] மழைக்காலங்களில், பெரும்பாலும் கனமான மற்றும் நீடித்த மழை பெய்யும். தொய்வாலா மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பிற சமவெளிப் பகுதிகள் என்பன கடலோர மகாராட்டிர பகுதிகளை போல அதிக மழையை அனுபவிக்கின்றன. மலைப்பாங்கான பகுதிகளில் குளிர்காலத்தில் வானிலை இதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இப்பகுதியில் விவசாயத்திற்கான வளமான வண்டல் மண், போதுமான வடிகால் மற்றும் ஏராளமான மழை என்பன கிடைக்கின்றன. மலைப்பகுதிகளும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.

புள்ளிவிபரங்கள்[தொகு]

தொய்வாலா நகர் பஞ்சாயத்து 2011 ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி 8709 மக்கட் தொகையைக் கொண்டிருந்தது. இப்பகுதியின் நிர்வாக வரம்புக்குள் 1791 வீடுகள் காணப்பட்டன. மொத்த மக்கட் தொகையில் ஆண்கள் 53.5% வீதமும், பெண்கள் 46.5% வீதமும் உள்ளனர். இந்த நகரத்தில் 1000 ஆண்களுக்கு 869 பெண்கள் என்ற பாலின விகிதம் காணப்படுகின்றது. தொய்வாலா மக்களின்  சராசரி கல்வியறிவு விகிதம் 90.1% ஆகும்.  இது தேசிய சராசரியான 74.4% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு விகிதம் 93.8% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 85.8% ஆகவும் காணப்படுகின்றது. தொய்வாலா மக்கட்  தொகையில் 10.8% வீதமானோர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள்.[4]

மதங்கள்[தொகு]

இந்துக்கள் மக்கள் தொகையில் 80.2% வீதமாகவும், முஸ்லிம்கள் 10.1% வீதமாகவும், சீக்கியர்கள் 9.1% வீதமாகவும் உள்ளனர்.[5] தேராதூன் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் அருகிலுள்ள நகரமான பனியாவாலாவில் கர்வாலி மக்கள் பரவலாக வசிக்கின்றனர். பழைய தெஹ்ரி நகரில் வசிப்பவர்களில் பலர் அங்கு குடியேறினர். அருகிலுள்ள கிராமங்களான நுனாவாலா, ஷெர்கர், ஜாப்ராவாலா, கெரி, புலவாலா, சந்த்மாரி ஆகியவற்றில் பெரும்பாலும் சீக்கிய மதம்  பின்பற்றப்படுகின்றன.

தீபாவளி, ஈத், குடியரசு மற்றும் சுதந்திர தினம், ஹோலி , விஜயதசமி, குர்பூராப் போன்ற முக்கிய இந்திய விழாக்கள் இப்பகுதி மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன. மற்ற உள்ளூர் திருவிழாக்களில் பிரபலமான ஜந்தா மேளா,  லோஹ்ரி, குரு கோபிந்த் ஜெயந்தி, பைசாக்கி , குரு அர்ஜன் சாஹிப் ஜி ஷாஹீதி திவாஸ், குரு கிரந்த் சாஹிப் ஜி முதல் பிரகாஷ் புராப் திவாஸ் மற்றும் சோட்டி சாஹிப்சாதே ஷாஹீதி திவாஸ் ஆகியவை அடங்கும்.[6] கிறிஸ்துமஸ் , காதலர் தினம், புத்தாண்டு ஈவ் போன்ற பிரபலமான மேற்கத்திய கொண்டாட்டங்களும் இப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்றன.

மொழிகள்[தொகு]

கர்வாலி , குமாவோனி , பஞ்சாபி மற்றும் இந்தி ஆகியவை தொய்வாலா என்பன  அருகிலுள்ள கிராமங்களில் பேசப்படும் மற்றும் முதல் மொழிகளாகும். உருது மற்றும் ஆங்கிலம் கூட அதிகம் புழங்குகின்றன. நிர்வாக ரீதியாக ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டு பொதுவான மொழிகள் ஆகும்.  சமசுகிருதம், பிரஞ்சு போன்ற மொழிகள் சில பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொய்வாலா&oldid=2868541" இருந்து மீள்விக்கப்பட்டது