தொப்புள் குடலிறக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தொப்புள் குடலிறக்கம்
Children with umbilical hernias, Sierra Leone (West Africa), 1967.jpg
தொப்புள் குடலிறக்கம் கொண்ட குழந்தைகள் சியேரா லியோனி (மேற்கு ஆப்பிரிக்கா), 1967.
சிறப்புபொது அறுவை சிகிச்சை (General surgery)

தொப்புள் குடலிறக்கம் (Umbilical hernia) என்பது பொதுவாக தொப்புள் மற்றும் அதன் அறுகில் உள்ள பகுதிகள் பிதுங்கி தெரிவதைக்குறிக்கும். இவ்வகையான பாதிப்புக்கள் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் என்றாலும் ஆண்களையே அதிகமாக பாதிக்கிறது. இது குழந்தை பிறந்தபோதும், 40 வயதிலும், மற்றும் முதுமையிலும் பாதிக்க வாய்ப்புள்ளது. இவை அதிக அளவாக பெருங்குடலின் பெருஞ்சுற்றுவிரிமடிப்புப் (Greater omentum) பகுதியிலும், எப்போதாவது சிறுகுடல் பகுதியிலும் கொழுப்பு போன்ற வீக்கம் ஏற்பட்டு பாதிக்கிறது. [1]

பாதிப்புக்கள்[தொகு]

குழந்தை பருவ பாதிப்பிற்கான காரணம்[தொகு]

தாயின் வயிற்றில் சிசு வளரும்போதே அதன் முன் வயிற்றுச்சுவர் முழுவளர்ச்சி அடையும் வரை வயிற்றுக்குள் இருக்கவேண்டிய பல உறுப்புக்களும் வயிற்றுக்கு வெளில் உள்ள ஒரு பையில்தான் இருக்கும். இந்த பையும் குழந்தையின் வயிறும் தொப்புள் துளைவளியாக இணைந்திருக்கும். குழந்தை வளர வளர பையில் உள்ள் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக குழந்தையின் வயிற்றுக்குள் உள்ளிழுக்கப்படுகிறது. பின் கருப்பையில் நஞ்சுவோடு சேர்ந்து தொப்புள்கொடி மட்டும் வெளியில் இருக்கும். குழந்தையின் பிறப்பிற்குப்பின் தொப்புள் கொடி அகற்றப்பட்டபின்னர் தொப்புளின் வாய்பகுதி மூடிவிடுகிறது. சரியாக குடல் பகுதி உள்ளே செல்லாமல் இருந்தாலோ, அப்பகுதியில் உள்ள தோள் பகுதி வலுவற்ற நிலையில் இருந்தாலோ தொப்புள் பகுதி வீக்கம் கொண்டதாக காணப்படுகிறது.

நடுத்தரவயது பாதிப்பு[தொகு]

இவ்வகையான பாதிப்பு பொதுவாக பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிப்பது, உடற்பருமன், வயிற்றில் கட்டி, பலமுறை கர்ப்பமானவர்கள், இரட்டைக்கருவை சுமப்பவர்கள், நுரையீரல் பாதிப்பின் காரணமாக தொடர்ந்து இருமல் உடையவர்கள், கனமான சுமையை தூக்கும் கூலியாட்கள், மேலும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு நீர் கோர்த்துக்கொள்வதாலும் இவ்வகையான பாதிப்பு ஏற்படுகிறது.

சிகிச்சை[தொகு]

இவ்வகையான பாதிப்பிற்கு இரண்டு வகையான சிகிச்சை முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிறிய அளவிலான வீக்கமாக இருந்தால் நுன்துளை அறுவைச் சிகிச்சை மூலமும், பெரிய அளவிலான வீக்கமாகவும், அல்லது உள்ளே குடல் அழுகி இருந்தால் அறுவை சிகிச்சை மூலமும் பாதிப்பு சரிசெய்யப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. தெளிவோம் 09: தொப்புள் குடலிறக்கம் தெளிவோம்!இந்து தமிழ் திசை - சனி, நவம்பர் 16 2019