உள்ளடக்கத்துக்குச் செல்

தொன் போஸ்கோவின் சலேசிய அருட்சகோதரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியர்
Congregatio Filiarum Mariæ Auxiliatricis
சுருக்கம்FMA
நிறுவனர்புனித ஜான் போஸ்கோ மற்றும் புனித மரிய தொமனிகா மசரெல்லோ, FMA
வகைபெண்களுக்கான அர்ப்பண வாழ்வு துறவு சபை (திருப்பீட உரிமை பெற்றது)
தலைமையகம்வியா தெல்'அடெனியோ சலேசியானோ, 81, 00139 உரோமை, இத்தாலி
உறுப்பினர்கள்
11,535 (2020 இன் படி)
தலைவர்
சகோ. கியாரா காசுஓலா, FMA
துணைத் தலைவர்
சகோ. மரியா டெல் ரொசாரியோ கார்சியா ரிபாஸ், FMA
மைய அமைப்பு
சலேசியர்கல்
வலைத்தளம்cgfmanet.org

தொன் போஸ்கோவின் சலேசிய அருட்சகோதரிகள், அலுவல் முறைப்படி கிறிஸ்தவர்களின் கசாய அன்னையின் புதல்வியர் என்பவர்கள் ( இத்தாலியம்: Figlie di Maria Ausiliatrice  ; சுருக்கமாக FMA ) 1872 இல் புனித மரிய தொமனிகா மசரெல்லோவால் தொடங்கப்பட்ட பெண்களுக்கான துறவற சபை ஆகும். தூரினில் இளையோர் கல்விப்பணியில் ஜான் போஸ்கோ மற்றும் அவரது சலேசியர்ளுடன் இணைந்து பணியாற்றுவதற்காக இது நிறுவப்பட்டது.

வரலாறு

[தொகு]

ஆகஸ்ட் 5, 1872 அன்று, இத்தாலியின் அலெஸாண்ரியாவின் மோர்னேசில், தொன் போஸ்கோ, அக்வியின் ஆயர் மற்றும் பணி. ஜோசப் சியாண்ட்ரா ஆகியோரின் முன்னிலையில் கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் புதல்வியரின் நவதுறவு தொடக்கம் மற்றும் முதல் துறவு உறுதி ஏற்ப்பும் நடந்தது. அன்று மேரி மசரெல்லோ சபையின் முதல் தவைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

ஒரு ஆண்டுக்குப்பின் இவர்களின் முதல் உறைவிடப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி காஸ்டெல்லெட்டோ டி'ஓர்பாவின் கல்வி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டது. அக்டோபர் 8, 1874 அன்று, சலேசிய சகோதரிகள் போர்கோ சான் மார்டினோவில் தங்கள் முதல் இல்லத்தினை திறந்தனர். சலேசியர்களின் இளையோர் சங்க அமைப்பினை (Oratory) பெண்களுக்காக இவர்கள் நடத்தினர். இளம் பெண்கள் தன்னிறைவு பெற உதவும் வகையில் அவர்களுக்கு கல்வி கற்பிக்க பட்டறைகளையும் சிறுதொழில் பயிற்சி அரங்குகளையும் நடத்தினர்.

புனித அன்னாள் சகோதரிகளோடு துறவு வாழ்வுக்கான பயிற்சிகளைப் பெற்றப்பின்னர் ஆகஸ்ட் 28, 1875 அன்று, இவர்கள் தங்களது இறுதி துறவு உறுதிமொழிகளை ஏற்றனர்.

இத்தாலிக்கு வெளியே இவர்களின் முதல் இல்லம் 1877 ஆம் ஆண்டு பிரான்சின் நைஸில் திறக்கப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள், மசரெல்லோவும் முதல் மறைபரப்பு சகோதரிகளும் திருத்தந்தை ஒன்பதாம் பயஸினை சந்தித்து ஆசி பெற்றனர். ஐந்து நாட்களுக்குப் பிறகு முதல் மறைபரப்பு சகோதரிகள் உருகுவேவுக்குப் புறப்பட்டனர்.

சலேசிய அருட்சகோதரிகள், 1879

பல வருட திருத்தம், கலந்துரையாடல் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு, தொன் போஸ்கோ, டிசம்பர் 8, 1878 அன்று அமலோற்பவ அன்னையின் விழா நாளில், இச்சபையின் சட்டங்களின் முதல் அச்சுப் பதிப்பை இவர்களுக்கு வழங்கினார். பிப்ரவரி 1879 இல் சபையின் தாய் இல்லம் மோர்னேஸிலிருந்து நிஸ்ஸா மான்ஃபெராதோவுக்கு மாற்றப்பட்டது.

1880 ஆம் ஆண்டு, சலேசிய சகோதரிகள் அர்ஜென்டினாவின் படகோனியாவிற்கு இரண்டாவது மறைபரப்பு பயணத்தைக் தொடங்கினர். 1881 ஆம் ஆண்டு மே 14 அன்று, அன்னை மசரெல்லோ நோய்வாய்ப்பட்டு தமது 44 வயதில் நிஸ்ஸா மான்ஃபெராதோவில் இறந்தார். அவர் இறக்கும் போது இச்சபையில் 26 துறவு இல்லங்களும் 166 சகோதரிகளும் இருந்தனர்.

பணி

[தொகு]

இவர்களின் பணி இளைஞர்களை மையமாகக் கொண்டது. இங்கிலாந்தின் லிவர்பூலில் உள்ள சகோதரிகள் 1965 ஆம் ஆண்டு மேரி, ஹெல்ப் ஆஃப் கிறிஸ்டியன் உயர்நிலைப் பள்ளியைத் திறந்தனர்.

2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இச்சபை 89 நாடுகளில் 11,535 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. [1]

குறிப்புகள்

[தொகு]