தோனா கதரீனா
தோனா கதரீனா | |
---|---|
கண்டி அரசி | |
ஆட்சி | 1581 |
முன்னிருந்தவர் | கரலியத்தே பண்டாரன் |
பின்வந்தவர் | முதலாம் ராஜசிங்கன் |
துணைவர் | முதலாம் ராஜசிங்கன், முதலாம் விமலதர்மசூரியன், செனரத் மன்னன் |
வாரிசு(கள்) | இரண்டாம் இராஜசிங்கன் |
மரபு | ஸ்ரீசங்கபோதி வம்சம் |
தந்தை | கரலியத்தே பண்டாரன் |
இறப்பு | 10 ஜூலை 1613 |
தோனா கதரீனா (பிறவிப்பெயர்: குசுமாசன தேவி) கண்டி அரசை 1581 இல் ஆண்ட ஒரு அரசி ஆவாள். கண்டி மன்னன் கரலியத்தே பண்டாரன் என்பானின் மகளான இவள், போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டின் கீழேயே வாழ நேரிட்டதுடன், அவர்களால் மதமாற்றப்பட்டு, தோனா கதரீனா எனும் பெயரையும் பெற்றுக்கொண்டாள்.[1]
வாழ்க்கை
[தொகு]தந்துறைப் போர் காலவேளையில், கரலியத்தே பண்டாரன் இறந்ததை அடுத்து, 1581இல் போர்த்துக்கேயரால், போர்த்துக்கல்லின் திறை அரசாக முடிசூட்டப்பட்டாள் தோனா கதரீனா. அப்போது இளமங்கையாக இருந்த கதரீனா, சீதாவக்கை மன்னன் முதலாம் இராஜசிங்கனால் அதேயாண்டு ஆட்சிகவிழ்க்கப்பட்டாள்.
முதலாம் இராஜசிங்கன் இறந்தபின்னர் ஏற்பட்ட ஆட்சிக்குழப்பத்தில், முதலாம் விமலதர்மசூரியன் இவளை மணந்ததன் மூலம், ஆட்சிக்குத் தகுதியாகி, கண்டி அரசனாக 1594இல் அரியணை ஏறினான்.[2] அவனும் இறக்கநேரிட்டதும், தன் மைத்துனன் செனரத் மன்னனை மணந்து அவனுக்கும் ஆட்சிபீடமேறும் வாய்ப்பை நல்கினாள்.[3]
முதலாம் விமலதர்மசூரியனிடம் அவளுக்கு மகாஸ்தான அதகாசி, சந்தான அதகாசி ஆகிய இரு மக்களும், செனரதனிடம் மகாஸ்தானனும் பிறந்தார்கள். மகாஸ்தான அதகாசி, 1612இல் ஏற்பட்ட ஒரு தீராப்பிணியால், ஆறுநாட்கள் நோய்ப்படுக்கையில் கிடந்து மரித்தான். அரசியல் தந்திரத்துக்காக, அவள் மீண்டும் பௌத்தத்தைத் தழுவிக்கொண்டாலும், கதரீனா இறுதிவரை, கிறிஸ்தவப் பெண்ணாகவே வாழ்ந்து மடிந்ததாக அறியமுடிகின்றது. பேரன்புக்குரிய மூத்த மகன் மகாஸ்தான அதகாசி இறந்ததும், கதரீனாவைப் பெருந்துயர் வாட்ட, 10 யூலை 1613இல் அவள் மரித்தாள்.
மேலும் காண்க
[தொகு]உசாவியவை
[தொகு]- ↑ A Description of the Great and Most Famous Isle of Ceylon – Philip Baldaeus
- ↑ ரஜீவ விஜேசிங்க: Political Principles and Their Practice in Sri Lanka
- ↑ Rajiva Wijesinha: Political Principles and Their Practice in Sri Lanka