தொனால்டு எண்டர்சன்
தொனால்டு ஐன்சிலீ எண்டர்சன் Donald Ainslie Henderson | |
---|---|
எண்டர்சன் அமெரிக்கக் குடியரசுத்தலைவரின் உயர் பரிசாகிய விடுதலைப் பதக்கம் 2002 இல் பெற்றபோது | |
பிறப்பு | செப்டம்பர் 7, 1928 இலேக்குவுடு, ஒகையோ |
இறப்பு | ஆகத்து 19, 2016 கில்கிறித்து ஆசுபைசு (Gilchrist Hospice), பால்டிமோர் |
தேசியம் | அமெரிக்கன் |
துறை | நோய்ப் பரவல் இயல் |
பணியிடங்கள் | உலக உடல்நல அமைப்பு, சான்சு ஆப்கின்சுப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பெரியம்மையை அறவே ஒழித்தது |
விருதுகள் | Ernst Jung Prize (1976) Public Welfare Medal (1978) National Medal of Science (1986) Japan Prize (1988) Albert B. Sabin Gold Medal (1994) Presidential Medal of Freedom (2002) |
தொனால்டு ஐன்சிலீ எண்டர்சன் (Donald Ainslie Henderson) (பிறப்பு செப்டம்பர் 7, 1928, இறப்பு ஆகத்து 19, 2016) ஓர் அமெரிக்க மருத்துவரும், கல்வியாளரும் நோய்ப்பரவல் இயல் வல்லுநரும் ஆவார். இவருடைய புகழுக்கு முதன்மையான காரணம், இவர் 1967-1977 ஆகிய காலப்பகுதியில் பத்து ஆண்டுகளாகப் பெரியம்மையை உலகம் முழுக்கவும் ஒழிக்கப் பாடுபட்டதே ஆகும். குழந்தைப்பருவத்திலேயே தடுப்பூசி மூலம் தடுக்க உதவினார். 1977 முதல் 1990 வரை சான்சு ஆப்கின்சுப் பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் நலத்துறையின் முதல்வராக இருந்தார்.[1] அதன்பின்னர் நோய்பரவாமல் இருக்க முன்னேற்பாடுகளைச் செய்வதிலும், இயற்கையாகவோ செயற்கையாகவோ ஏற்படும் உயிரிய தாக்குதல்களில் இருந்து காத்துக்கொள்ளும் முறைகளையும் முன்னெடுக்க நாடளாவிய வகையில் உழைத்தார்.[2] இறக்கும் முன் பேராசிரியராகவும் முன்னாள் துறைத்தலைவராகவும் சான்சு ஆப்கின்சுப் பல்கலைக்கழகத்தில் இருந்தார். அதே நேரம் பிட்ஃசுபர்கு பல்கலைக்கழகத்தின் பொதுமக்கள் நலத்துறையில் பேராசிரியராகவும் சிறப்புநாட்டிய அறிவாளராகவும் இருந்தார்.[3][4]
வாழ்க்கை வரலாறு
[தொகு]இளமைக்காலம்
[தொகு]எண்டர்சன் அமெரிக்காவில் உள்ள ஒகையோ மாநிலத்தில் இலேக்குவுடு (Lakewood) என்னும் இடத்தில் குடிபெயர்ந்து வந்த இசுக்காட்டிய-கனடிய பின்புலமுள்ள்ள பெற்றோர்களுக்குப் பிறந்தார். இவருடைய தந்தையார் தாவீது எண்டர்சன் ஒரு பொறியாளர். தாயார் எலினயோர் மாக்குமில்லன் ஒரு செவிலியர். மருத்துவத்தில் இவருக்கு ஆர்வம்வர உந்துகோலாக இருந்தவர் இவருடைய தாய்மாமனாகிய கனடியர் வில்லியம் மாக்குமில்லன். இவர் பொதுநிலை மருத்துவராகவும் கனடாவில் கனடிய நாடாளுமன்றத்தினருக்கான மூத்த மருத்துவராகவும் இருந்தார்.[5]
கல்வி
[தொகு]எண்டர்சன் 1950 இல் ஓபர்லின் கல்லூரியில் பட்டம் பெற்றபின்னர் மருத்துவ மேற்பட்டமாகிய எம்.டி பட்டத்தை 1954 இல் உரோச்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் பெற்றார். நியூயார்க்கு மாநிலத்தில் கூப்பர்சுட்டவுன் என்னும் இடத்தில் உள்ள மேரி இமோச்சீன் பாசெட்டு மருத்துவமனையில் ( Mary Imogene Bassett Hospital) மருத்துவராகவும், தொற்றுநோய் நடுவத்தில் கொள்ளைநோய் பற்றிய துப்பறிவுச் சேவை நிறுவனத்தின் பொதுமக்கள் நல ஆட்சிப்பொறுப்பாளராக இருந்தார். மேலே குறிப்பிட்ட நடுவமே பின்னாளில் அமெரிக்காவின் புகழ்பெற்ற நோய்க்கட்டுப்பாட்டு-தடுப்பு நடுவகம் (Center for Disease Control and Prevention [CDC]) என அழைக்கப்படுகின்றது. இவர் 1960 இல் சான்சு ஆப்கின்சுப் பல்கலைக்கழகத்தில் தூய்நலமும் மக்கள் பொதுநலத்துக்குமான துறையில் முனைவர்ப்பட்டம் (Ph.D) பெற்றார். சான்சு ஆப்கின்சுப் பல்கலைக்கழகத்தில் இது சான்ச் ஆப்கின்சிசு புளூம்பெர்கு பொதுமக்கள்நலக் கல்லூரி என அழைக்கப்பெறுகின்றது.[5]
பொறுக்கியெடுக்கப்பட்ட சில வெளியீடுகள்
[தொகு]நூல்கள்
- Fenner F, Henderson DA, Arita I, Jezek Z, Ladnyi. (1988) Smallpox and Its Eradication (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 92-41-56110-6), Geneva, World Health Organization. The definitive archival history of smallpox.
- Henderson DA. (2009) Smallpox, the Death of a Disease (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1591027225) New York: Prometheus Books
நூலுள் படலங்கள்
- Henderson DA (1993) Surveillance systems and intergovernmental cooperation. In: Morse SS, ed. Emerging Viruses. New York: Oxford University Press: 283-289.
- Henderson DA, Borio LL (2005) Bioterrorism: an overview. In Principles and Practice of Infectious Diseases (Eds. Mandell MD, Bennett JE, Dolin R) Phil, Churchill Livingstone, 3591-3601.
- Henderson DA (2010) The global eradication of smallpox: Historical Perspective and Future Prospects in The Global Eradication of Smallpox (Ed: Bhattacharya S, Messenger S) Orient Black Swan, London. 7-35
கட்டுரைகள்
- "Medical progress: Epidemic neuromyasthenia—clinical syndrome". N Engl J Med 260 (757-764): 814–818. 1959.
- "The epidemiological basis for the control of influenza". Am J Public Health 54: 563–571. 1964. doi:10.2105/ajph.54.4.563. https://archive.org/details/sim_american-journal-of-public-health_1964-04_54_4/page/563.
- "Complications of smallpox vaccination: I. National survey in the United States, 1963". N Engl J Med 276: 125–132. 1967. doi:10.1056/nejm196701192760301.
- Henderson DA. (1967) Smallpox eradication and measles-control programs in West and Central Africa: Theoretical and practical approaches and problems. Industry and Trop Health VI, 112-120, Harvard School of Public Health, Boston.
- Henderson DA (1972). "Epidemiology in the global eradication of smallpox". Int J Epidemiol 1: 25–30. doi:10.1093/ije/1.1.25. https://archive.org/details/sim_international-journal-of-epidemiology_spring-1972_1_1/page/25.
- Henderson DA (1975). "Smallpox eradication—the final battle (Jenner Lecture)". J Clin Path 28: 843–849. doi:10.1136/jcp.28.11.843. https://archive.org/details/sim_journal-of-clinical-pathology_1975-11_28_11/page/843.
- Henderson DA (1976). "The eradication of smallpox". Scientific American 235: 25–33. doi:10.1038/scientificamerican1076-25. https://archive.org/details/sim_scientific-american_1976-11_235_5/page/25.
- Henderson DA (1998). "The challenge of eradication: lessons from past eradication campaigns (The Pittsfield Lecture)". Int J Tuberc Lung Dis 2: 54–58.
- Henderson DA. (1998) The siren song of eradication. J Royal College of Physicians 32, 580-584.
- Henderson DA (1999). "The looming threat of bioterrorism". Science 283: 1279–1282. doi:10.1126/science.283.5406.1279.
- Henderson DA; Inglesby TV; Barlett JG (1999). "Smallpox as a biological weapon: medical and public health management". JAMA 281: 2127–2137. doi:10.1001/jama.281.22.2127. பப்மெட்:10367824.
- "A clearly present danger: confronting the threat of bioterrorism". Harvard International Forum 23: 49–53. 2001.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ Deans of the Bloomberg School. Johns Hopkins Bloomberg School of Public Health. http://www.jhsph.edu/about/history/deans-of-the-school/. Retrieved September 16, 2015.
- ↑ D. A. Henderson to Direct New Office of Public Health Preparedness CIDRAP News. November 6, 2001. Retrieved September 16, 2015.
- ↑ Our Staff: D. A. Henderson, MD, MPH. UPMC Center for Health Security. 2015. http://www.upmchealthsecurity.org/our-staff/profiles/henderson/index.html பரணிடப்பட்டது 2017-11-14 at the வந்தவழி இயந்திரம். Retrieved September 16, 2015, 2015.
- ↑ Donald Henderson - Faculty Directory | Johns Hopkins Bloomberg School of Public Health. http://www.jhsph.edu/faculty/directory/profile/3691/donald-henderson பரணிடப்பட்டது 2015-09-14 at the வந்தவழி இயந்திரம். Retrieved September 16, 2015.
- ↑ 5.0 5.1 Henderson DA. Smallpox: The Death of a Disease. Amherst, NY: Prometheus Books; 2009.
வெளியிணைப்புகள்
[தொகு]- Archives Reference: The Donald A. Henderson Collection in the Institute of the History of Medicine Library at Johns Hopkins spans his career in smallpox eradication, including newspaper articles, honors, biographical material, lecture notes, speeches, and correspondence as well as medals and other awards.
- A Web site www.zeropox.info provides some of the material in the archives and is rapidly expanding.