தொட்டமஞ்சு
தொட்டமஞ்சு | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
தொட்டமஞ்சு (Doddamanchi) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்தைச் சேர்ந்த தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு மலை கிராமம் ஆகும்.[1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 66 கி.மீ. தொலைவிலும், தளியில் இருந்து 8 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 329 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தொடர்வண்டி நிலையம் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்தக் கிராமத்தில் 2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், 1,225 வீடுகள் உள்ளன. மொத்த மக்கள்தொகையானது 2,937 ஆக உள்ளது. இதில் பெண்கள் விகிதம் 48.6%. மொத்த எழுத்தறிவு விகிதம் 22.4% ஆகும். இதில் பெண்களின் எழுத்தறிவு விகிதமானது 8.0% என்று உள்ளது.[2]
கோயில்கள்
[தொகு]இங்கு புகழ்பெற்ற மஞ்சு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
படத்தொகுப்பு
[தொகு]”மஞ்சு மாரியம்மன் கோயில்” ”மஞ்சு மாரியம்மன் கோயில் உள்ளே” ”மஞ்சு மாரியம்மன் கோயில் உற்சவர்”
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அஞ்செட்டி புதிய வட்டத்தில் 15 வருவாய் கிராமங்கள் இணைப்பு". இந்து தமிழ். திசம்பர் 21 2018.
- ↑ "Doddamanchi". அறிமுகம். onefivenine.com. Retrieved 5 செப்டெம்பர் 2018.