தொடுதல் அல்லாத விசைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரு பொருள்களுக்கிடையே இடைவினை ஏற்படும்போது ஒவ்வொன்றும் மற்றொன்றின் மீது விசையை செயல்படுத்துகிறது. இடைவினை மறைந்துவிட்டால், பொருள்களின்மீது விசை இருக்காது.

வகைகள்[தொகு]

பொருள்களுக்கிடையேயான விசைகளை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவைகள், தொடுதல் விசைகள் மற்றும் தொலைவு செயல் காரணமாக ஏற்படும் தொடுதல் அல்லாத விசைகள் ஆகும்.

விளக்கம்[தொகு]

இரு காந்தங்களுக்கு இடையேயான தொடுதல் அல்லாத விசை

இடைவினை புரியும் இரு பொருள்கள், ஒன்றுடன் ஒன்று தொடாமலேயே, ஒன்றையொன்று இழுக்கக்கூடிய அல்லது தள்ளக்கூடிய விசைகள் தொடுதல் அல்லாத விசைகள் எனப்படும்.

எடுத்துக்காட்டு[தொகு]

ஈர்ப்பியல் விசை, மின்விசை மற்றும் காந்த விசை போன்றவை தொடுதல் அல்லாத விசைகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடுதல்_அல்லாத_விசைகள்&oldid=3687702" இலிருந்து மீள்விக்கப்பட்டது