தொடர்ந்திணைந்துள்ள ஐக்கிய அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொடர்ந்திணைந்துள்ள அமெரிக்க ஐக்கிய நாடு - தொடர்ந்திணையாத இரண்டு மாநிலங்கள் (அலாஸ்கா, அவாய்) கீழே இடதுபுறத்தில் காட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்திணைந்துள்ள ஐக்கிய அமெரிக்கா (contiguous United States) அல்லது அலுவல்பூர்வமாக சமவெல்லை ஐக்கிய அமெரிக்கா (conterminous United States)[1]வட அமெரிக்கா கண்டத்தில் அடுத்தடுத்துள்ள 48 ஐக்கிய அமெரிக்க மாநிலங்களையும் வாசிங்டன், டி. சி.யையும் உள்ளடக்கியது.[2] இதில் புவியியல்படி தொடர்ந்திணையாத மாநிலங்களான அலாஸ்காயும் அவாயும், மற்றும் கடல்கடந்த அமெரிக்க தனித்த பகுதிகளும் அடங்காது.[3][4] தொடர்புள்ள மற்றொரு சொற்றொடரான கண்டப்பகுதி ஐக்கிய அமெரிக்கா (continental United States) இதிலிருந்து வேறுபட்டது; கண்டப்பகுதி ஐக்கிய அமெரிக்காவில் வட அமெரிக்க கண்டத்தில் உள்ள அலாஸ்கா சேர்க்கப்படும்; ஆனால் அவாயும் தனித்த பகுதிகளும் அடங்காது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "What constitutes the United States, what are the official definitions?". www.usgs.gov.
  2. "United Airlines website". Archived from the original on April 2, 2012. பார்க்கப்பட்ட நாள் April 4, 2012. Contiguous United States: The 48 adjoining states and the District of Columbia.
  3. Random House (1991). Random House Webster's College Dictionary. New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-679-40110-5. https://archive.org/details/randomhousewebst00newy. 
  4. These maps show the contiguous 48 states and D.C., but not Alaska and Hawaii.

வெளி இணைப்புகள்[தொகு]