தொடரிமக் குறிகை
Appearance
எல்லாக் காலத்திலும், வரையறை இன்றி எந்த அளவையும் ஏற்று விளங்கக் கூடியது தொடரிமக் குறிகை (Analog signal) ஆகும். இயற்கையில் நாம் காணும் காட்சிகள் தொடரிமக் குறிகை வகையைச் சேர்ந்ததாகும். எடுத்துக்காட்டாக, ஓடும் நதியைக் காணும் போது, நீர், நின்று நின்று பாயாமல், சீராகத்தான் பாய்வதாகத் தெரிகிறது. அதே அந்த நதியை ஒவ்வொரு குறித்த இடைவேளையில் நிலைப்படம் பிடித்து (எ.கா 5 நொடிக்கு ஒரு முறை), அவற்றை அதே இடைவேளைகளில் வரிசைப் படுத்திப் பார்த்தோமானால், அது எண்ணிமக் குறிகை வகையைச் சார்ந்திடும்.
இயற்கையில் நாம் கேட்கும் ஒலிகளும் இவ்வகையைச் சேர்ந்தனவே.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Analogue Signal – an overview". ScienceDirect. Archived from the original on 13 May 2023. பார்க்கப்பட்ட நாள் 30 September 2023.
- ↑ "Digital Signal Processing | Journal". ScienceDirect (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 August 2022.
- ↑ "What is quantization error and how does signal to noise relate to this?". Tektronix. Archived from the original on 29 May 2023. பார்க்கப்பட்ட நாள் 30 September 2023.