தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் உள்ள விவாசாயிகளுக்கு உதவும் நோக்கத்துடன் அவர்களைக் கொண்டு கூட்டுறவு அமைப்பின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்படுகின்றன. இந்த அமைப்பிற்கு தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் செயலாளர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இயக்குனர்களாகவும் அவர்களிலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட தலைவரும் உள்ளனர். இவர்கள் எடுக்கும் முடிவுகளின்படி இந்த வங்கிகள் செயல்படுகின்றன.