உள்ளடக்கத்துக்குச் செல்

தொங்சியாங் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொங்சியாங் மக்கள் (Dongxiang people) என்பவர்கள் சீனாவில் வாழ்கின்ற மங்கோலிய இனத்தை சார்ந்த ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீன மக்கள் குடியரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 56 இனக்குழுக்களில் ஓர் இனக்குழுவினர் ஆவர்.

இவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் கான்சுமாகாணத்தில் உள்ள லின்சியா மாவட்டத்தில் உள்ள தொங்சியாங் தன்னாட்சி மாகாணத்தில் வாழ்கின்றனர். 2010 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த இனத்தை சார்ந்த ஏறத்தாழ ஆறரை இலட்சம் மக்கள் தொகை சீனாவில் வசிக்கின்றனர். இருப்பினும் சீன அரசின் சிறுபான்மையின நலக்கொள்கைகளில்  பயனடைவதற்காக, சனத்தொகை கணக்கெடுப்புபின் பொது பல ஊய் மக்கள் தங்களை தொங்சியாங் மக்கள் என்று அடையாளப்படுத்தியதால் இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டதாக ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்.[1]

வரலாறு

[தொகு]

தொங்சியாங் மக்கள் மத்திய ஆசியர்களின் வழித்தோன்றல்கள் என்று பொதுவாக சீன வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.[1] இவர்கள் அனைவரும் பெரும்பாலும் 1340களில் ஹம்சே (哈木則) என்ற ஒரு இசுலாமியர் மூலம் இசுலாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டனர்.[1] தற்போது இந்த மக்கள் பெரும்பாலும் மங்கோலிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த  தொங்சியாங் மொழியைப் பேசுகின்றனர். இதற்கு முன்பு இவர்கள் வேறு மத்திய ஆசிய மொழியைப் பேசினர்.[1]

2013 இல் பதிப்பிடப்பட்ட மரபணு ஆராய்ச்சி பகுப்பாய்வின் படி, இந்த மக்களின் நெருங்கிய உறவினர்கள் கிர்கிசுகள் மற்றும் தஜிக்குகள் என்று அறியப்பட்டுள்ளது. இவர்கள் பொதுவான மூதாதையர்களை கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுகிறது.[2] 2018 இல் வெளியிடப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் படி, சீன மற்றும் மத்திய ஆசியர்களில் தொங்சியாங் மக்களின் நெருங்கிய உறவினர்கள் சீனாவின் உள் மங்கோலியாவில் வசிக்கின்ற புரியாட்டு மக்கள் ஆவர். இவர்களின் அடுத்த நெருங்கிய உறவினர்கள் சின்சியாங்கில் உள்ள கசக் இனத்தவர்கள் ஆவர்.[3][4]


தொங்சியாங் மக்கள் பல்வேறு மங்கோலிய, ஹான், ஊய் மற்றும் திபெத்திய குடும்பப்பெயர்களை  உபயோகிக்கின்றனர்.[5] வாங், காங், ஜாங், காவோ மற்றும் ஹுவாங் போன்ற ஹான் சீன குடும்பப்பெயர்களைக் கொண்ட தொங்சியாங் மக்கள், ஹான் மக்கள் வழிவந்தவர்கள் என்று கூறுகின்றனர். மா மற்றும் மு போன்ற குடும்பப்பெயர்கள் ஊய் வம்சாவளியைச் சேர்ந்தவை.[6][7] சில அரிதான சந்தர்ப்பங்களில் தொங்சியாங் மக்கள் மற்ற இனக்குழுவினருடன் திருமணம் செய்துகொள்கின்றனர்.[8]


1900 ஆம் ஆண்டில், தளபதிகள் மா புலு மற்றும் மா புக்ஸியாங் ஆகியோர் கபாக்சர் கிளர்ச்சியில் வெளிநாட்டு துருப்புக்களை எதிர்த்துப் போராட தொங்சியாங் மக்கள் உதவி புரிந்தனர். 1937-45 இல் தளபதி மா பியாவோ இரண்டாம் சீன-சப்பானியப் போரில் சப்பானை எதிர்த்துப் போராட தொங்சியாங் மக்களைக் கொண்டு வந்தார்.[9]

பொருளாதாரம்

[தொகு]

தொங்சியாங் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இவர்கள் உருளைக்கிழங்கு, சோளம், பார்லி, தினை மற்றும் கோதுமை போன்றவற்றை பயிரிடுகின்றனர். பாரம்பரிய கம்பளங்களை பின்னுவதில் நிபுணத்துவம் பெற்ற இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கைவினை கலைஞர்களாகவும் உள்ளனர்.[10]

கலாச்சாரம்

[தொகு]

1940 இல் அமெரிக்க ஆசிய சங்கத்தால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு பதிப்பில் இவர்கள் இனத்தால் மங்கோலியர், மதத்தால் இசுலாமியர் மற்றும் கலாச்சாரத்தால் சீனர்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளனர்.[11][12]

நூடுல்ஸ், தின்பண்டங்கள், மதுபானங்கள் மற்றும் பலவற்றிற்குப் பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கு தொங்சியாங் உணவு வகைகளில் முக்கியமானதாகும்.[10]

ஆண்களுக்கான பாரம்பரிய தொங்சியாங் உடையில் பொத்தான்கள் பாதிக்கப்பட்ட சட்டை மற்றும் பரந்த இடுப்புப் பட்டை ஆகியவை அடங்கும். இந்த இடுப்புப் பட்டைகள் சில நேரங்களில் கத்திகள், பாட்டில்கள் அல்லது சிறிய பைகளைத் தொங்கவிடப் பயன்படுகின்றன. ஆட்டுத்தோல் சட்டைகள் போன்ற பருவகால ஆடைகள் குளிர்காலத்தில் அணியப்படுகின்றன. தொங்சியாங் பெண்கள் பின்னல் செய்யப்பட்ட ஆடைகளை அணிவார்கள். அதில் அகலமான கை சட்டைகள் மற்றும் கால்சட்டைகள் அடங்கும். இளம் பெண்கள் அலங்கரிக்கப்பட்ட பருத்தி தொப்பிகள் மற்றும் பட்டு முக்காடுகளை அணிவார்கள். சிறப்பு சந்தர்ப்பங்களில், பெண்கள் குதிகால் கொண்ட காலணிகளை அணிவார்கள்.[10]

மொழி

[தொகு]

தொங்சியாங் மக்கள் பெரும்பாலும் மங்கோலிய மொழி குடும்பத்தைச் சேர்ந்த தொங்சியாங் மொழியைப் பேசுகிறார்கள். இந்த மொழி தனித்துவமான அம்சங்களைக் கொண்டபோதிலும், மாண்டரின் சீன மொழியிலிருந்து பல கடன் வார்த்தைகளைக் கொண்டுள்ளது..[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Xu, Dan; Xie, Xiaodong; Wen, Shaoqing (2013). "The Dongxiang Language and People". Journal of Cambridge Studies 8 (2): 40-47. https://api.repository.cam.ac.uk/server/api/core/bitstreams/d7a60928-c9b5-499f-94eb-deb58b66e27d/content.  Translated from: 徐丹; 文少卿; 谢小冬 (2012). "东乡语和东乡人". 民族语文 (3): 59-62. 
  2. 文少卿; 谢小冬; 徐丹 (2013). "接触与混合——从 Y 染色体的角度看东乡人群及其语言的关系". 遗传 35 (6): 766. http://www.chinagene.cn/CN/article/downloadArticleFile.do?attachType=PDF&id=2699. 
  3. Zhan, Xiaoni (2018). "Forensic characterization of 15 autosomal STRs in four populations from Xinjiang, China, and genetic relationships with neighboring populations". Scientific Reports 8 (4673). https://www.nature.com/articles/s41598-018-22975-6. 
  4. Yao, Hong-Bing; Wang, Chuan-Chao; Tao, Xiaolan; Shang, Lei; Wen, Shao-Qing; Zhu, Bofeng; Kang, Longli; Jin, Li et al. (2016-12-07). "Genetic evidence for an East Asian origin of Chinese Muslim populations Dongxiang and Hui" (in en). Scientific Reports 6 (1): 38656. doi:10.1038/srep38656. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:27924949. Bibcode: 2016NatSR...638656Y. 
  5. James Stuart Olson. An ethnohistorical dictionary of China. p. 66.
  6. Henry G. Schwarz. The minorities of northern China: a survey. Vol. 17 of Studies on East Asia. p. 100.(Original from the University of Michigan )
  7. Richard V. Weekes. Muslim peoples: a world ethnographic survey, Volume 1. p. 238.(Original from the University of Michigan )
  8. Colin Legerton; Jacob Rawson (2009). Invisible China: A Journey Through Ethnic Borderlands. Chicago Review Press. p. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55652-814-9. பார்க்கப்பட்ட நாள் 2010-06-28. dongxiang han hui marriages.
  9. Louis M. J. Schram. The Monguors of the Kansu-Tibetan Frontier: Their Origin, History, and Social Organization. p. 23.
  10. 10.0 10.1 10.2 Elliot, Sheila Hollihan (2006). Muslims in China. Philadelphia: Mason Crest Publishers. pp. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59084-880-2.
  11. American Asiatic Association (1940). Asia: journal of the American Asiatic Association, Volume 40. Asia Pub. Co. p. 659. பார்க்கப்பட்ட நாள் 2011-05-08.
  12. Hartford Seminary Foundation (1941). The Moslem World, Volumes 31–34. Hartford Seminary Foundation. p. 182. பார்க்கப்பட்ட நாள் 2011-05-08.
  13. Henry Serruys; Françoise Aubin (1987). The Mongols and Ming China: customs and history, Volume 1. Variorum Reprints. p. cxv. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86078-210-0. பார்க்கப்பட்ட நாள் 2010-06-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொங்சியாங்_மக்கள்&oldid=3900066" இலிருந்து மீள்விக்கப்பட்டது