தொங்கு தேவாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிபி மூன்றாம் நூற்றாண்டு அல்லது நான்காம் நூற்றாண்டில் முதலில் கட்டப்பட்ட கோப்திய கிறித்தவர்களின் மிகவும் புகழ்பெற்ற தேவாலயமான தொங்கு தேவாலயம்
தேவாலயத்தின் உட்பகுதி
தேவாலயத்தின் உட்பகுதி

புனித கன்னிமேரி கோப்திய மரபுவழித் தேவாலயம் (Saint Virgin Mary's Coptic Orthodox Church), பரவலாக தொங்கு தேவாலயம் (Hanging Church, El Muallaqa) எகிப்தில் உள்ள பழைமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இந்த இடத்தில் உள்ள தேவாலயத்தின் வரலாறு மூன்றாம் நூற்றாண்டில் துவங்குகிறது.[1]

கோப்திய கெய்ரோவில் (பழைய கெய்ரோ) உரோமானியர்களால் கட்டப்பட்ட பாபிலோன் கோட்டையின் நுழைவாயில் மேலாக அமைந்துள்ளதால் இந்த தேவாலயம் தொங்கு தேவாலயம் என அழைக்கப்படுகிறது. இதனை எட்ட 29 படிகள் ஏற வேண்டும்; கெய்ரோ வந்த துவக்ககால பயணிகள் இதனை "மாடிப்படி தேவாலயம்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.[2] உரோமானியர்களின் காலத்திலிருந்து தரைமட்டம் ஆறு மீட்டர் உயர்ந்துள்ளதால் நுழைவாயிற் தூண்கள் பெரும்பாலும் மண்ணுக்கடியில் சென்று விட்டன;இதனால் தற்போது தேவாலயம் உயர்ந்த நிலையில் காணப்படுவதில்லை. சாலையிலிருந்து தேவாலயத்தின் நுழைவு கல் வளைவுக்கடியில் இரும்பு கதவுகளால் காக்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முகப்பும் இரட்டை மணிக்கூண்டுகளும் குறுகிய தாழ்வாரத்தினூடே காணலாம்; இந்தத் தாழ்வாரம் தற்கால விவிலியக் காட்சிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. படிகள் ஏறியபிறகு மற்றொரு நுழைவாயிலுக்குப் பின்னர் மற்றொரு முற்றம் காணக்கிடைக்கிறது. இதன்மூலம் பதினொன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெளி முகமண்டபத்தை அடையலாம்.

காட்சிக்கூடம்[தொகு]

சாலையிலிருந்து நுழைவாயில்  
பீப்பாய் கவிகைமாட கூரை  
பளிங்கு போதனை மேடையின் விவரம்  
திருமேனிகளும் அலங்காரத் திரைகளும்  
தேவாலயத்தின் உள்ளே வழிபாடுகள் நடைபெறுதல்  
கூரை  
மிகவும் மதிக்கப்படுகின்ற ஓர் சின்னம்  
கோப்திய மரபுவழி பேராயர்களின் கலந்தாய்வுத் திருக்குழு  
தொங்கு தேவாலயத்தின் உட்புறத்தின் கலைச்செழிப்பு

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொங்கு_தேவாலயம்&oldid=2754471" இருந்து மீள்விக்கப்பட்டது