தொங்கும் பள்ளத்தாக்கு
தோற்றம்
தொங்கும் பள்ளத்தாக்கு (Hanging Valley) என்று அழைக்கப்படுவது ஒரு பள்ளத்தாக்கு அமைப்பாகும். இவை பனியாறுகளோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும். முதன்மை கண்டப் பனியாறு, துணைப் பனியாற்றினை விட அதிக அளவு அரிப்புத்திறன் கொண்டிருக்கும் போது தொங்கும் பள்ளத்தாக்கு உருவாகின்றது. துணை ஆற்றில் உள்ள பனி உருகிய பின்பு அது முதன்மையாற்றின் மீது தொங்கிக் கொண்டிருப்பது போல் காட்சியளிக்கும். இவ்வாறான துணை ஆறு தொங்கும் பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகின்றது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267.
- ↑ "Hanging Valley". http://worldlandforms.com. Retrieved 14 ஆகத்து 2017.
{{cite web}}: External link in(help)|publisher=