தொங்காக் லைரெம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொங்காக் லைரெம்பி
தொங்காக் லைரெம்பி
லைரெம்பிகள்-இல் ஒருவர்
தொங்காக் லீமா, இடைக்கால மெய்டேய் மாயெக் அபுகிடாவில் எழுதப்பட்டுள்ளது
அதிபதிபாதால உடகின் நுழைவாயிலின் பாதுகாவலர்
வேறு பெயர்கள்
  • தொங்காக் லைரெம்மா
  • தொங்காக் லைரெம்பி
  • தொங்காக் லீமா
வகைமெய்டேய் இனக் கடவுள்
இடம்லங்கோல் மலைப்பகுதி
துணைதொங்கலென்
நூல்கள்புயாக்கள்
சமயம்பண்டைய மணிப்பூர்
விழாக்கள்இலாய் அரோபா

 

தோங்காக் லைரெம்பி , லாங்கோல் லைரெம்மா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் மெய்டேய் புராணங்களிலும் மதத்திலும் உள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாகும். அவர் மரணத்தின் தெய்வீக பெண் உருவமாக பாவிக்கப்படுகிறார். பாதாள உலகத்தின் நுழைவாயிலின் கதவைக் காப்பதாகவும், மரணத்தின் நிலத்தை அவருடைய துணையான தொங்கலென் ஆட்சி செய்வதாகவும் நம்பப்படுகிறது. [1] [2] [3] சலைலென் சிதாபாவின் கைகளில் பாதாள உலக கடவுள்களுக்கும் மேல் உலக தெய்வங்களுக்கும் இடையே நடந்த போரில் தொங்கலேல் தோற்றுப் போனபோது அவர் கணவனை விட்டுப் பிரிந்தார் என்கிறது புராணம். தோல்வியுற்றவரின் மனைவியான தேவியை, பாதாள உலகத்தின் நுழைவு வாயிலின் காவலாளியாக இருக்கும்படி வெற்றியாளர் கேட்டுக் கொண்டார். மேலும் தோங்கலேலுக்கு, அவருக்குப் பதிலாக கம்னுங் கிகோய் லூன்பியைக் கொடுத்தார் என்றும் புராணத்தில் கூறப்படுகிறது. [1] [4]

சொற்பிறப்பியல்[தொகு]

"தொங்காக் லைரெம்பி", இடைக்கால மெய்டேய் மாயக் அபுகிடாவில் எழுதப்பட்ட தெய்வத்தின் பெயர்.

"தொங்கக் லைரெம்பி" என்ற பெயர் "தொங்கக்" மற்றும் "தாங்கக்" ஆகிய இரண்டு மெய்டே மொழி ( மணிப்பூரி மொழி ) வார்த்தைகளால் ஆனது. "தொஙாக்" (பெயர்ச்சொல் வார்த்தையின் பெயர்ச்சொல் வடிவம் - தொங்காக்பா) என்பது மெய்டேய்யில் கதவுக் காவலாளி அல்லது வாயில்காப்பாளர் என்று பொருள். [5] "லைரெம்பி" என்பதற்கு தெய்வம் அல்லது பெண் தெய்வம் என்று பொருள். [6]

திருவிழா[தொகு]

ஒவ்வொரு ஆண்டும், லை அரோபா திருவிழாவானது தோங்காக் லைரெம்பி தெய்வத்தின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. [7] [8] [9]

கேலரி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "থোঙাক লাইরেম্বী". http://hueiyenlanpao.com/wp-content/uploads/2016/06/10.06.2018-B6.pdf. 
  2. A Critical Study Of The Religious Philosophy. 1991. பக். 108. https://archive.org/details/in.ernet.dli.2015.461915/page/n108/mode/2up. 
  3. A Critical Study Of The Religious Philosophy. 1991. பக். 109. https://archive.org/details/in.ernet.dli.2015.461915/page/n109/mode/2up. 
  4. L. Kunjeswori (2003). Archaeology in Manipur. Rajesh Publications. p. 147. ISBN 978-81-85891-18-7.
  5. Sharma, H. Surmangol (2006). "Learners' Manipuri-English dictionary."Thongngakpa"". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-03-22.
  6. Sharma, H. Surmangol (2006). "Learners' Manipuri-English dictionary."Lairembi"". dsal.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-03-22.
  7. Raatan, T. (2004) (in en). Encyclopaedia of North-east India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7835-274-9. https://books.google.com/books?id=-tv9WOAVh5AC&dq=thongak+lairembi+lai+haraoba+old+Manipuri+religion+annual+festivities&pg=PA178. 
  8. Singh, N. Tombi (1975). Manipur and the Mainstream. Chitrebirentombichand Khorjeirup. p. 76.
  9. N. Tombi (1972). Manipur: A Study. Available with Raj Stores. p. 31.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொங்காக்_லைரெம்பி&oldid=3914795" இலிருந்து மீள்விக்கப்பட்டது