தொங்கவிடப்பட்ட காப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொங்கவிடப்பட்ட காப்பி என்பது ஒருவர் காப்பி வாங்கும் போது தெரியாத இன்னுமொருவரின் காப்பிக்காக ஈகையாக பணம் செலுத்துவது ஆகும். பெரும்பாலும் தாம் பணம் செலுத்தி காப்பி வாங்க முடியாதவர்கள் அந்த உணவகத்து வந்து கேட்டால் அவர்களுக்கு அந்தக் காப்பி இலவசமாக வழங்கப்படும். இந்த வழக்கம் இத்தாலியில் 2008 அளவில் தொடங்கி தற்போது சமூக வலைத்தளங்கள் ஊடாக பல நாடுகளில் பரவி உள்ளது. காப்பி மட்டும் இல்லாமல் பிற உணவுகளை இவ்வாறு முன்னதாக பணம் செலுத்தும் வழக்கமும் பெருகி வருகிறது.

உணவு இல்லாதவர்களுக்கு காப்பி ஒரு ஊட்டச்சத்து உணவு இல்லை என்றும், சிலர் ஏமாற்றி இலவசமாக இவற்றைப் பெற முடியும் என்றும் இந்த வழக்கத்தை சிலர் விமர்சித்து உள்ளார்கள். பெரும் வணிக நிறுவனங்கள் இதை நடைமுறைப்படுத்துவது அவர்களின் வணிகத்துக்குப் பலன் சேர்க்கும் ஒரு செயற்பாடே என்றும் விமர்சித்துள்ளார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொங்கவிடப்பட்ட_காப்பி&oldid=1405909" இலிருந்து மீள்விக்கப்பட்டது