தொகைநிலைச் செய்யுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தொகைநிலைச்செய்யுள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தொகைநிலைச் செய்யுள் என்பது ஒருவராலோ அல்லது பலராலோ உரைக்கப்பட்டு பல பாட்டாய் வருவனவும், பொருள், இடம், காலம், தொழில், பாட்டு, அளவு, ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஒன்றாகத் தொகுக்கப்பட்டு தொகை எனப்பெயர் பெற்றனவும் ஆகிய செய்யுள்கள் ஆகும். இவற்றுள் ஒருவராலோ பலராலோ இயற்றப்படுவது தொகை என்பது பொதுவான இலக்கணம். பொருள் முதலியவற்றால் ஒத்திருந்து தொகை எனப் பெயர்பெறுவன என்பது சிறப்பிலக்கணம். இவை தவிர பிறவற்றால் தொகை எனப் பெயர் பெறுவனவும் உள்ளன.

சான்று[தொகு]

இவற்றில் இனியவை நாற்பதும், திருவங்கமலையும் பண்பு, சினை என்ற பிறவற்றால் தொகுக்கப்பட்டதற்கு சான்றாகும்.

உசாத்துணை[தொகு]

தா.ம. வெள்ளைவாரணம் ,'தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மட வெளியீடு. 1968

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகைநிலைச்_செய்யுள்&oldid=958286" இருந்து மீள்விக்கப்பட்டது