உள்ளடக்கத்துக்குச் செல்

தொகைச்சொல் (9 பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகண்டு நூல்கள் தொகையகராதி என்னும் தலைப்பில் தொகைச்சொற்கள் பலவற்றைச் சுட்டி அவற்றை விரித்துக் காட்டியுள்ளன. அவற்றில் சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு ஆகியவற்றறில் ஒன்பது பொருள்களைக் குறிக்கும் தொகைச்சொல் இங்கு விளக்கப்படுகிறது. [1]

தொகைச்சொல் விரி
நவ கண்டம்

1. வடபால் விதேகம் 2. தென்பால் விதேகம் 3. கீழ்பால் விதேகம் 4. மேல்பால் விதேகம் 5. வடபால் இரேவதம் 6. தென்பால் இரேவதம் 7. வடபால் பரதம் 8. தென்பால் பரதம் 9. மத்திம கண்டம்

நவ புண்ணியம்

1. எதிர்கொளல் 2. பணிதல் 3. இருக்கை தரல் 4. காலை நீரால் கழுவல் 5. காலில் புதுமலர் பூசை 6. தூபம் காட்டல் 7. விளக்கு காட்டல் 8. அறுசுவை உணவு அளித்தல் 9. அயர்வை நீக்குதல்

நவ தாரணை = மனத்தை ஒருமுகமாகக் குவித்தல்

1. நாம தாரணை = பெயர் சொல்லல் 2. வச்சிர தாரணை = மன உறுதி 3. மாயா தாரணை = மனமயக்க நிலை 4. சித்திர தாரணை = ஓவியத்தை உற்றுநோக்கல் 5. செய்யுள் தாரணை = பாடல்களைப் படித்தல் 6. நிறைவு குறைவு ஆகிய எண்பொருள் தாரணை = நிறை குறை எண்ணல் 7. சத்த தாரணை = ஓர் ஒலியையே கேட்டடல் 8. வத்து தாரணை = ஏதாவது ஒரு பொருளையே நோக்கல் 9. சதுரங்க தாரணை = நாலாத் திசையும் நோக்கல்

நவ தாளம்

1. அரி தாளம் 2. மரும தாளம் 3. சம தாளம் 4. சய தாளம் 5. சித்திர தாளம் 6. துருவ தாளம் 7. நிவிர்த தாளம் 8. படிம தாளம் 9. விட தாளம்

நவமணி

1. வைரம் 2. வைடூரியம் 3. முத்து 4. மாணிக்கம் 5. பவளம் 6. கோமேதகம் 7. இந்திரநீலம் 8. மரகதம் 9. புட்பராகம

நாடக நவரசம்

1. சிங்காரம் (புன்னகை) 2. பெருநகை 3. கருணை 4. வீரியம் 5. அற்புநம் 6. பயம் 7. ரௌத்திரம் (ஆறும் சினம்) 8. குற்சை 9. சாந்தம்

மேற்கோள்

[தொகு]
  1. சேந்தன் திவாகரம் பக்கம் 301 முதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகைச்சொல்_(9_பொருள்)&oldid=4445702" இலிருந்து மீள்விக்கப்பட்டது