உள்ளடக்கத்துக்குச் செல்

தொகைச்சொல் (8 பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகண்டு நூல்கள் தொகையகராதி என்னும் தலைப்பில் தொகைச்சொற்கள் பலவற்றைச் சுட்டி அவற்றை விரித்துக் காட்டியுள்ளன. அவற்றில் சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு ஆகியவற்றறில் எட்டு பொருள்களைக் குறிக்கும் தொகைச்சொல் இங்கு விளக்கப்படுகிறது. [1]

தொகைச்சொல் திவாகர நிகண்டு விரி
அட்டமா நாகம்
  1. வாசுகி
  2. அனந்தன்
  3. விட்டபற்பன்
  4. மகாபற்பன்
  5. சங்கபாலன்
  6. தக்கன்
  7. கார்க்கோடகன்
  8. ஏலுமா குளிகன்
அட்ட திக்குப் பாலகர்
அவர்களின் திசை
அடையாளம்
  1. இந்திரன் - கிழக்கு - கொடி
  2. அங்கி – தென்கிழக்கு - பூனை
  3. இயமன் – தெற்கு - சிங்கம்
  4. நிருதி – தென்மேற்கு - ஞாளி (வேட்டை நாய்)
  5. வருணன் – மேற்கு - இடபம்
  6. வாயு – வடமேற்கு - கழுதை
  7. குபேரன் – வடக்கு - யானை
  8. ஈசானன் (சனி) - வடகிழக்கு - காகம்
அட்டமங்கலம்
  1. கவரி
  2. நிறைகுடம்
  3. கண்ணாடி
  4. தோட்டி
  5. முரசு
  6. விளக்கு
  7. பதாகை
  8. இணைகயல்
அட்ட மூர்த்தம்
  1. பார்
  2. நீர்
  3. தேயு (தீ)
  4. வாயு (காற்று)
  5. ஆகாயம்
  6. சூரியன்
  7. சந்திரன்
  8. இயமானன் (எமன்)
அட்டமா சித்தி
  1. அணிமா
  2. மகிமா
  3. கரிமா
  4. இலகிமா
  5. பிராத்தி
  6. பிரகாமியம்
  7. ஈசத்துவம்
  8. வசித்துவம்

அட்டமா யோகம்

  • யோக விளக்கம்
  1. இயமம் * கொல்லா விரதம், மெய்ம்மை கூறல், கள்ளாமை, பிறர் பொருள் காதலின்மை ஆகியவை இயம அடங்கல்
  2. நியமம் * தவத்தொடு தூய்மை, தத்துவ நூல் ஓதல், மனம் உவந்து இருத்ததல், தெய்வம் வழிபடல் ஆகியவை நியம அடங்கல்
  3. ஆசனம் *
  4. பிராணாயாமம்
  5. பிரத்தியாகாரம்
  6. தாரணை
  7. தியானம்
  8. சமாதி
எண் பேர் அச்சம்
  1. சிறப்பு இல்லாச் சிதடு
  2. உறுப்பு இல்லாப் பிண்டம்
  3. கூன்
  4. குறள்
  5. ஊமை
  6. செவிடு
  7. முட உறுப்பு
  8. மருள்

எண் வகைக் காட்சி

  1. ஐயப்படாமை
  2. அவா ஒன்று இன்மை
  3. அறிவு உவர்ப்பு இன்மை
  4. மூடம் அறுத்தல்
  5. அறப்பழி அழித்தல்
  6. அழிந்தோரை நிறுத்தல்
  7. அறத்தை விளக்கல்
  8. அறு சமயத்தவர்க்கு அன்புறல்

எண்குணம்

  1. அனந்த ஞானம்
  2. அனந்த தரிசனம்
  3. அனந்த வீரியம்
  4. அனந்த சுகி
  5. நாமம் இன்மை
  6. கோத்திரம் இன்மை
  7. ஆயு இன்மை (ஆயு = காலம்)
  8. அழியா இன்பம்
எண்வகைக் குற்றம்
  1. ஞாநாவரணியம்
  2. தரிசநாவரணியம்
  3. வேதநீயம்
  4. மோகநீயம்
  5. ஆயுநாமம்
  6. கோத்திரம்
  7. அந்தராயம் – காயவந்தராயம்
  8. அந்தராயம் – வாயுவந்தராயம்
எண்வகைக் குற்றம்
  1. ஞாநாவரணியம்
  2. தரிசநாவரணியம்
  3. வேதநீயம்
  4. மோகநீயம்
  5. ஆயுநாமம்
  6. கோத்திரம்
  7. அந்தராயம் – காயவந்தராயம்
  8. அந்தராயம் – வாயுவந்தராயம்
வணிகர் எண்குணம்
  1. தனிமையாதல்
  2. முனிவிலன் ஆதல்
  3. இடன் அறிந்து ஒழுகல்
  4. பொழுதொடு புணர்தல்
  5. உறுவது தெரிதல்
  6. இறுவது அஞ்சாமை
  7. ஈட்டல்
  8. பகுத்தல்
எண்வகைக் கணம்
  1. நீரின் கணம்
  2. தீயின் கணம்
  3. அந்தர கணம்
  4. இயமானன் கணம்
  5. மதியின் கணம்
  6. எரிகதிர்க் கணம்
  7. மாருத கணம்
  8. மாநிலக் கணம்
எண் வகை மெய்ப் பரிசம்
  1. ஒட்டுதல்
  2. பிடித்தல்
  3. தீண்டல்
  4. தடவல்
  5. கட்டுதல்
  6. வெட்டுதல்
  7. குத்தல்
  8. ஊன்றல்
எண் வகைக் கணிதம்
  1. சங்கலிதம்
  2. விபலிதம்
  3. குணநம்
  4. பாகாரம்
  5. வர்க்கம்
  6. வர்க்கமூலம்
  7. கனம்
  8. கனமூலம்
எண்வகை மணம்
  1. பிரமம்
  2. பிரசாபத்தியம்
  3. ஆரிடம்
  4. தெய்வம்
  5. காந்தருவம்
  6. ஆசுரம்
  7. இராக்கதம்
  8. பைசாசம்
எண்வகை வெற்றி
  1. வெட்சி * நிரை கவர்தல்
  2. கரந்தை * நிரை மீட்டல்
  3. வஞ்சி * வணங்காதவர் மேல் படையெடுத்தல்
  4. காஞ்சி * வஞ்சியாரை எதிர்த்தல்
  5. உழிஞை * எயில் வளைத்தல்
  6. நொச்சி * எயில் காத்தல்
  7. தும்பை * அதிரப் போரிடுவது
  8. வாகை * போரில் வெற்றி பெறுவது
எண்டிசை யானை
  1. ஐராவதம்
  2. புண்டரீகம்
  3. வாமனம்
  4. குமுதம்
  5. அஞ்சனம்
  6. புட்ப-தந்தம்
  7. சர்வபூமம்
  8. சுப்பிரதீபம்

மேற்கோள்

[தொகு]
  1. சேந்தன் திவாகரம் பக்கம் 296 முதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகைச்சொல்_(8_பொருள்)&oldid=4445641" இலிருந்து மீள்விக்கப்பட்டது