உள்ளடக்கத்துக்குச் செல்

தொகைச்சொல் (5 பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகண்டு நூல்கள் தொகையகராதி என்னும் தலைப்பில் தொகைச்சொற்கள் பலவற்றைச் சுட்டி அவற்றை விரித்துக் காட்டியுள்ளன. அவற்றில் சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு ஆகியவற்றறில் ஐந்து பொருள்களைக் குறிக்கும் தொகைச்சொல் இங்கு விளக்கப்படுகிறது. [1]

தொகைச்சொல் திவாகர நிகண்டு செய்தி
ஐந்திணை
  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்
  5. பாலை
பஞ்ச வாச வகை
  1. தக்கோலம்
  2. ஏலம்
  3. இலவங்கம்
  4. சாதிக்காய்
  5. கர்ப்பூரம்
பஞ்சாங்கம்
  1. திதி
  2. வாரம்
  3. நாள்
  4. யோகம்
  5. கரணம்
பஞ்ச மா சத்தம்
  1. தோல்
  2. துளை
  3. நரம்பு
  4. கஞ்சனை
  5. பாடல்
மதனன் பஞ்ச பாணம்
(மலர்-அம்பு)
இவற்றின் செயல்
  1. முல்லை * உன்மத்தம்
  2. அசோகு * தீரம்
  3. நீலம் * சந்தாபம்
  4. சூதம் * வசீகரணம்
  5. அல்லி / முளரி * மோகனம்
பஞ்ச சயனம்
5 வகைப் படுக்கை
  1. மயிர் மெத்தை
  2. பஞ்சு மெத்தை
  3. தூவி (பறவை இறகு) மெத்தை
  4. மலர் மெத்தை
  5. பாய்
பஞ்ச மா பாதகம்
  1. கொலை
  2. களவு
  3. கள் உண்ணல்
  4. குரு-நிந்தை
  5. பொய் சொல்லல்
ஐம்பால்
  1. ஒருவன்
  2. ஒருத்தி
  3. பலர்
  4. ஒன்று
  5. பல
ஐம்பால் முடி வகை
  1. கொண்டை
  2. சுருள்
  3. குழல்
  4. பனிச்சை
  5. வார்-முடி
ஐந்து உண்டி
  1. கடித்தல்
  2. பருகல்
  3. விழுங்கல்
  4. நக்கல்
  5. எடுத்துச் சுவைத்தல்
குதிரை நடை
  1. மல்ல-கதி
  2. மயூர-கதி
  3. சச-கதி
  4. வானர-கதி
  5. சர-கதி (சரம்=அம்பு)
ஐவகை வினா
  1. அறியான் வினா
  2. அறிவு ஒப்பு காண்டல் வினா
  3. ஐயம் அறுத்தல் வினா
  4. அவன் அறிவு தான் கோடல் வினா
  5. மெய் அவற்குக் காட்டல் வினா
ஈசன் ஐம்முகம்
  1. சத்தியோசாதம்
  2. வாமம்
  3. அகோரம்
  4. தற்புருடம்
  5. ஈசானம்
பஞ்ச பூதம்
  1. மண்
  2. நீர்
  3. கனல்
  4. காற்று
  5. விண்
ஐம்பொறி
  1. மெய்
  2. வாய்
  3. கண்
  4. மூக்கு
  5. செவி
ஐவகைத் தாயர்
  1. பாராட்டும் தாய்
  2. உணவூட்டும் தாய்
  3. முலையூட்டும் தாய்
  4. கைத்தாய் (சீராட்டும் தாய்)
  5. செவிலித்தாய்

மேற்கோள்

[தொகு]
  1. சேந்தன் திவாகரம் பக்கம் 289 முதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொகைச்சொல்_(5_பொருள்)&oldid=4444320" இலிருந்து மீள்விக்கப்பட்டது