தொகைச்சொல் (32 பொருள்)
நிகண்டு நூல்கள் தொகையகராதி என்னும் தலைப்பில் தொகைச்சொற்கள் பலவற்றைச் சுட்டி அவற்றை விரித்துக் காட்டியுள்ளன. அவற்றில் சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு ஆகியவற்றறில் முப்பத்திரண்டு பொருள்களைக் குறிக்கும் தொகைச்சொல் இங்கு விளக்கப்படுகிறது. [1]
|
தொகைச்சொல் |
விரி |
|---|---|
|
முப்பத்திரண்டு அறம் |
1. ஆதுலர் சாலை (சத்திரம் 2. ஓதுவார்க்கு உணவு 3. அறு சமயத்தோர்க்கு உணவு 4. பசுவுக்கு வாயுறை 5. சிறைச்சோறு 6. ஐயம் 7. தின்பண்டம் 8. மகச்சோறு 9. மகப்பெறுவித்தல் 10. மக வளர்த்தல் 11. மகப் பால் 12. அறவைப் பிணம் சுடுதல் 13. அறவைத் தூரியம் 14. வண்ணார் வதுவை 15. நாவிதர் வதுவை 16. பூணூல் 17. நோய் 18. மருந்து 19. கண்ணாடி 20. காதோலை 21. கண்மருந்து 22. தலைக்கு எண்ணெய் 23. பெண்போகம் 24. சுண்ணம் 25. பிறர் துயர் காத்தல் 26. தண்ணீர்ப் பந்தல் 27. மடம் 28. தடாகம் 29. கா 30. ஆ உரிஞ்சு நடுதறி 31. ஏறு விடுத்தல் 32. விலைகொடுத்துக் கொலையுயிர் மீட்டல் |
மேற்கோள்
[தொகு]- ↑ சேந்தன் திவாகரம் பக்கம் 307