தை நீர் ஆடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தை மாதத்தில் நீராடுதல் தை நீர் ஆடல் (தைந்நீராடல்) எனப்படும். திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்கள் மார்கழி மாதத்தில் நீராடுதல் பற்றித் தெரிவிக்கின்றன. இது தை மாத நீராட்டு. மகளிர் தவக்கோலத்தோடு தைந்நீர் ஆடும் செய்தியை ஒருபாடல் தெரிவிக்கிறது. தாய்மைப் பேறு பெறுதல் வேண்டும் என வேண்டிக்கொண்டு தவக் கோலத்துடன் தையில் நீராடுவார்களாம். [1] அப்போது அவர்கள் மனம் தைம்மாத ஊற்றுத் தெளிநீர் போலத் தூய்மையாக இருக்குமாம். [2] கன்னிமை கழியாக் கன்னியர் இறைவன்மீது ஒருதலைக் காம மேலீட்டால் இந்த நீராட்டு விழாவை இசையோடு பாடிக்கொண்டு நிகழ்த்துவார்களாம். [3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தாய் அருகா நின்று தவத் தைந் நீராடுதல்? (பரிபாடல் 11 - 91)
  2. 'நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்' என்மாரும், (பரிபாடல் 11 - 115)
  3. இன்ன பண்பின் நின் தைந் நீராடல்
    மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட
    கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம
    இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்
    முன் முறை செய் தவத்தின் இம் முறை இயைந்தேம்;

    (பரிபாடல் 11 அடி 134 முதல் 138)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தை_நீர்_ஆடல்&oldid=1659195" இலிருந்து மீள்விக்கப்பட்டது