தைவான் பயணநூல்
| நூலாசிரியர் | யாங் ஷுவாங்சி |
|---|---|
| உண்மையான தலைப்பு | 臺灣漫遊錄 |
| மொழிபெயர்ப்பாளர் | லின் கிங் |
| மொழி | தைவானிய மாண்டரின், தைவானிய ஹொக்கியன், தைவானிய ஹக்கா, சப்பானியம் |
| வெளியீட்டாளர் | கிரேவொல்ஃப் அச்சகம் |
வெளியிடப்பட்ட நாள் | 2020 |
| விருதுகள் | தங்க முக்காலி விருது (2020) சிறந்த மொழிபெயர்ப்பு விருது (2024) மொழி பெயர்க்கப்பட்ட இலக்கியத்திற்கான தேசிய புத்தக விருது (2024) பன்னாட்டு புக்கர் பரிசு (2026) |
| ISBN | 978-1-64445-315-5 |
தைவான் பயணநூல் (Taiwan Travelogue) என்பது தைவானிய எழுத்தாளர் யாங் ஷுவாங்சி எழுதிய ஒரு புதினமாகும். மாண்டரின் மொழியில் எழுதப்பட்ட இது, 2020 இல் தைவானில் முதன்முதலில் வெளியிடப்பட்டது. [1] இந்தப் புதினம் 2021 ஆம் ஆண்டில், தங்க நாற்காலி விருதைப் பெற்றது. [2]
லின் கிங் என்பவரால் செய்யப்பட்ட இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2024 இல் கிரேவுல்ஃப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[3] 2024 இல், இது மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியத்திற்கான அமெரிக்க தேசிய புத்தக விருதை பெற்றது. இந்த விருதைப் பெற்ற முதல் தைவானிய புத்தகம் இதுவாகும்.[4] 2026 இல், இது பன்னாட்டு புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது.[5][6] பின்னர் அப்பரிசைப் பெற்றது.
கரின் பெட்ஸின் ஜெர்மன் மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவர உள்ளது.[7]
சுருக்கம்
[தொகு]இந்த புதினம் ஒரு கற்பனையான ஜப்பானிய எழுத்தாளர், அயோயாமா சிசுகோவால் எழுதப்பட்ட ஒரு சுயசரிதை புதினமாக சித்தரிக்கப்பட்டுள்ளது, மேலும் யாங்கால் மாண்டரின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. சர்ச்சைக்குரிய வகையில், அசல் மாண்டரின் வெளியீடு சிசுகோவின் படைப்பைக் காரணம் காட்டி, யாங்கை மொழிபெயர்ப்பாளராகப் பட்டியலிட்டது.[8] யாங்கின் கற்பனையான மொழிபெயர்ப்பாளரின் அடிக்குறிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு ஆகியவை இதில் அடங்கும். இதில் சிசுகோவின் மகளின் இறுதிக்குறிப்பும், புதினத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரமான Ō சிசுரு அல்லது சி-சான் என்ற தைவான் மொழிபெயர்ப்பாளரின் பின்னுரையும் அடங்கும். இந்த கற்பனையில், சிசுகோ எழுதிய புதினம் 1954 இல் ஜப்பானில் வெளியிடப்பட்டது, பின்னர் சிசுருவால் மாண்டரின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. பல தசாப்தங்களுக்குப் பிறகு யாங் புத்தகத்தைக் கண்டுபிடித்து தனது சொந்த மொழிபெயர்ப்பைச் செய்கிறார்.[9] [1] இந்த கற்பனைக் குறிப்புகள் மற்றும் வரலாறுகளுக்கு மேலதிகமாக, ஆங்கில மொழிபெயர்ப்பில் உண்மையான மொழிபெயர்ப்பாளரான லின் கிங்கின் அடிக்குறிப்புகள் மற்றும் மொழிபெயர்ப்பாளரின் குறிப்பும் அடங்கும்.[10]
ஜப்பானின் ஆக்கிரமிப்பில் இருந்த தைவானுக்கு 1938 இல் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார் ஜப்பானிய எழுத்தாளரான அயோயாமா சிசுகோ. சிசுகோ தனது பயணத்தின் போது சி-சான் என்ற புனைப்பெயர் கொண்ட தைய்வானிய மொழிபெயர்ப்பாளர் Ō சிசுருவை உதவியாளராக கொண்டுள்ளார். பண்பட்ட, பல மொழி பேசும் சி-சான் சிசுகோவுடன் தீவைச் சுற்றி வந்து, உள்ளூர் தைவானிய உணவு வகைகளை அவருக்கு அறிமுகப்படுத்துகிறாள்.[3][2] அந்த தைவானிய பெண் சி-சானுக்கும், சிசுகோவுக்கு இடையே மலரும் காதலை பயணம், உணவு ஆகியவற்றுக்கு ஊடாக புதினம் விவரிக்கிறது.
ஜப்பானிய ஆக்கிரமிப்பாளராக சிசுகோவும், ஆக்கிரமிக்கபட்ட நாட்டின் குடிமகளாக சி-சானும் இருப்பதால், இருவருக்குமான நெருக்கமான உறவில் கூட அதிகாரப் படிநிலை ஊடுருவி ஒரு இடைவெளியை உருவாக்குகிறது. என்பதை புதினம் உணர்த்துகிறது.
வரவேற்பு
[தொகு]2025 அக்டோபரில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல வாசகர்கள் இந்தியாவிற்கும் தைவானின் காலனித்துவ கடந்த காலங்களுக்கும் இடையே ஒற்றுமைகளைக் காண்கின்றனர்.[11]
இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 2026-ஆம் ஆண்டின் பன்னாட்டு புக்கர் பரிசைப் பெற்றது. இப்பரிசுக்கான நடுவர் குழுவின் தலைவரான நடாஷா பிரவுன், இப்புதினம் "ஒரு வியத்தகு இரட்டைச் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது; இது ஒரு காதல் புதினமாகவும், அதே வேளையில் கூர்மையான ஒரு பின்-காலனிய புதினமாகவும் வெற்றிகரமாகத் திகழ்கிறது" என்று குறிப்பிட்டார்.[12] மாண்டரின் சீன மொழியில் எழுதப்பட்ட முதல் நூலாகவும், ஒரு தைவானிய எழுத்தாளர் எழுதிய முதல் நூலாகவும் இப்பரிசை வென்ற பெருமையை இது பெற்றது.[13]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 Habib, Shahnaz (2024-11-15). "A Translation of a Translation of a Novel Within a Novel" (in en-US). The New York Times. பன்னாட்டுத் தர தொடர் எண்:0362-4331. https://www.nytimes.com/2024/11/15/books/review/yang-shuangzi-taiwan-travelogue.html.
- 1 2 "閱讀隨身聽.特集》作家楊双子/金鼎獎獲獎作《臺灣漫遊錄》ft.很多(台式)小吃". Openbook閱讀誌. Jan 19, 2022.
- 1 2 "Taiwan Travelogue by Shuang-Zi Yang". PublishersWeekly.com. Retrieved Jun 10, 2025.
- ↑ Liao, Tony; Yen-hsiang, Chao (May 24, 2025). "'Taiwan Travelogue' U.S. editor surprised by its success". Focus Taiwan - CNA English News.
- ↑ "The International Booker Prize 2026". The Booker Prizes. Retrieved 25 February 2026.
- ↑ "International Booker Prize Shortlist: 6 Novels With ‘Burning Humanity’". https://www.nytimes.com/2026/03/31/books/international-booker-prize-shortlist.html.
- ↑ Lin.
- ↑ Zax, Talya (24 November 2024). "The Sense That Most Defines a Culture". The Atlantic.
- ↑ Geffner, Marcie (14 November 2024). "Taiwan Travelogue: A Novel". Washington Independent Review of Books. Retrieved 30 March 2026.
- ↑ Fan, Christopher T. (24 June 2025). "Movement Injuries". Los Angeles Review of Books. Retrieved 30 March 2026.
- ↑ Chin-wei, Lee; Hsin-Yin, Lee. "Taiwanese novel prompts reflection on colonial past among Indian readers". focustaiwan.tw. Focus Taiwan. Retrieved 9 November 2025.
- ↑ Creamer, Ella (19 May 2026). "International Booker prize goes to novel originally written in Mandarin Chinese for the first time". The Guardian. https://www.theguardian.com/culture/2026/may/19/international-booker-prize-goes-to-novel-originally-written-in-mandarin-chinese-for-the-first-time.
- ↑ Marshall, Alex (19 May 2026). "International Booker Prize 2026: Taiwan Travelogue is First Winner Originally Written in Mandarin" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2026/05/19/books/international-booker-prize-taiwan-travelogue.html.