தைவான் சர்க்கரை ஆராய்ச்சி நிறுவனம்
Established | 1901 |
---|---|
Mission | தைவானின் பொருளாதாரத்தினை மேம்படுத்துதல் |
Owner | தைவான சர்க்கரை கழகம் |
Location | கிழக்கு மாவட்டம், தைனான், தைவான் |
Coordinates | 22°57′56.3″N 120°13′13.3″E / 22.965639°N 120.220361°E |
தைவான் சர்க்கரை ஆராய்ச்சி நிறுவனம் (Taiwan Sugar Research Institute)(TSRI; மரபுவழிச் சீனம்: 台糖研究所; பின்யின்: Táitáng Yánjiūsuǒ) என்பது தைவானின் சர்க்கரை கூட்டுத்தாபனத்தின் சர்க்கரை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனமாகும். இது தைவானின், கிழக்கு மாவட்டத்தில், தைனானில் அமைந்துள்ளது.
வரலாறு[தொகு]
இந்த ஆராய்ச்சி நிறுவனம் 1901ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]
வசதிகள்[தொகு]
இந்த ஆராய்ச்சி மையத்தில் 375 ஹெக்டேர் பரப்பில் விவசாய நிலங்கள் ஆய்விற்காகக் கரும்பு பயிரிட உட்பட 387 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.[1] இது தொடர்ச்சியான உயிர்-உலைகள் மற்றும் கீழ்நிலை செயலாக்க வசதிகளைக் கொண்டுள்ளது. ஆய்வகத்தில் வண்ணப்படிவுப் பிரிகை நெடுவரிசைகள், சவ்வு பிரிப்பான்கள், தெளிப்பு உலர்த்தி மற்றும் படிகமயமாக்கல் வசதிகள் உள்ளன.
ஆராய்ச்சி[தொகு]
உத்திகளைப் பயன்படுத்தி கரும்பு உற்பத்தியினை அதிகரிப்பதற்கான ஆய்வுகளும் நோய் மற்றும் பூச்சி எதிர்ப்புத் தன்மையுடைய கரும்பு இனங்களைக் கண்டுபிடிப்பதும் தற்போதைய ஆராய்ச்சி நோக்கமாக உள்ளது.
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "The Taiwan Sugar Research Institute: The sweet taste of success". Taiwan Today. 1 January 1983 இம் மூலத்தில் இருந்து 22 பிப்ரவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160222132059/http://taiwaninfo.nat.gov.tw/ct.asp?xItem=115901&ctNode=124.