தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம்

ஆள்கூறுகள்: 22°39′27.8″N 120°25′14.9″E / 22.657722°N 120.420806°E / 22.657722; 120.420806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம்
Taiwan Pineapple Museum
臺灣鳳梨工場
Map
நிறுவப்பட்டதுஆகத்து 2018
அமைவிடம்தாசு மாவட்டம், காவொசியுங், தைவான்
ஆள்கூற்று22°39′27.8″N 120°25′14.9″E / 22.657722°N 120.420806°E / 22.657722; 120.420806
வகைஅருங்காட்சியகம்
உரிமையாளர்இயோசியுடாங்கு டாய்பாங்கு நிறுவனம்

தைவான் அன்னாசி அருங்காட்சியகம் (Taiwan Pineapple Museum) தைவான் நாட்டின் தாசு மாவட்டத்தில் இருக்கும் காவோசியுங்கு நகராட்சியில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகமாகும்.

வரலாறு[தொகு]

இந்த அருங்காட்சியகம் 1925 ஆம் ஆண்டு கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்ட தொழிற்சாலையில் அமைந்துள்ளது. இயோசியுடாங் தைஃபாங்கு நிறுவனம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பிராந்தியத்தைச் சுற்றியுள்ள பண்ணைகளில் தயாரிக்கப்பட்ட அன்னாசிப்பழங்களை பெட்டிகளில் நிரப்பும் தொழிற்சாலையாகும். [1] [2] 2004 ஆம் ஆண்டில், தொழிற்சாலை கட்டிடம் காவோசியங்கு மாகாண அரசாங்கத்தால் ஒரு வரலாற்று நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டது. கட்டிடம் பின்னர் 2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் புதுப்பிக்கப்பட்டு தைவான் அன்னாசிப்பழ அருங்காட்சியகம் என மீண்டும் திறக்கப்பட்டது.[3]

கண்காட்சிகள்[தொகு]

அருங்காட்சியகத்தில் இயோசியுடாங் தைஃபாங் நிறுவனமும் தாசு மாவட்டத்தின் வரலாறும் காட்சிப்படுத்துகிறது. இப்பகுதியின் விவசாய நடவடிக்கைகள், குறிப்பாக அன்னாசிப்பழ தொழில் பற்றிய கண்ணோட்டமும் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன. நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட அன்னாசிப்பழ முத்திரைகளின் தொகுப்புகளின் திரட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. [3]

போக்குவரத்து[தொகு]

தைவான் இரயில்வேயின் இயுகியுடாங் நிலையத்திற்கு வடக்கே நடந்து செல்லும் தூரத்தில் இந்த அருங்காட்சியகத்தை அணுக முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sweet Home Pineapple". 1 May 2021. https://taiwantoday.tw/news.php?unit=20&post=200668&unitname=Culture-Taiwan-Review&postname=Sweet-Home-Pineapple. 
  2. "Taiwan Pineapple Museum". Museums. Ministry of Culture. 29 November 2021. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.
  3. 3.0 3.1 "Taiwan Pineapple Museum". Information Bureau, Kaohsiung City Government. பார்க்கப்பட்ட நாள் 29 November 2021.

புற இணைப்புகள்[தொகு]

  • Taiwan Pineapple Museum on Facebook