தைவானின் புவியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தைவான்
Taiwan
Taiwan (orthographic projection; southeast Asia centered).svg
பகுதிகிழக்காசியா
பரப்பளவுதரவரிசை 139[1]
 • மொத்தம்35,980 km2 (13,890 sq mi)
 • நிலம்89.7%
 • நீர்10.3%
கரையோரம்1,566.3 km (973.3 mi)
அதியுயர் புள்ளியூ சான், 3,952 m (12,966 ft)
காலநிலைவெப்பமண்டல கடல் காலநிலை[1]
இயற்கை வளங்கள்நிலக்கரி, இயற்கை எரிவளி, சுண்ணக்கல், பளிங்கு, கல்நார், விவசாய நிலம்[1]
சூழல் பிரச்சனைகள்தொழில்துறை உமிழ்வுகளிலிருந்து வளி மாசடைதல்; நீர் மாசுபடுதல், கழிவு நீர்; குடி நீர்; ஆபத்தான உயிரினங்களின் வணிகம்; குறைந்த அளவிலான கதிரியக்கக் கழிவகற்றல்[1]

தைவான் அல்லது தாய்வான் (Taiwan, (தாய்வானிய மொழி: Tâi-oân) கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவாகும். "தாய்வான்" என்பது சீனக் குடியரசு நிர்வகிக்கும் பகுதிகளையும் பொதுவாகக் குறிப்பிடுவது வழக்கமாகும். தீவுக் கூட்டங்களான தைவான் மற்றும் பெங்கு (Penghu) (தாய்பெய், காவோசியுங் மாநகராட்சிகள் தவிர்த்து) ஆகியன சீனக் குடியரசின் தாய்வான் மாகாணம் என உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறது.

தாய்வான் தீவு, கிழக்காசியாவில் சீனாவின் தென்கிழக்கே, ஜப்பானின் முக்கிய தீஇவுகளுக்கு தென்மேற்கே, பிலிப்பீன்சுக்கு வட-வடமேற்குத் திசையில் அமைந்துள்ளது. தாய்வான் போர்மோசா (Formosa) எனவும் அழைக்கப்படுறது. போர்மோசா என்பது போர்த்துகீச மொழியில் "அழகான (தீவு)" எனப் பொருள்படும். இது பசிபிக் கடலின் கிழக்கே, தென் சீனக் கடல் மற்றும் லூசோன் நீரிணை ஆகியவற்றுக்குத் தெற்கே, தாய்வான் நீரிணைக்கு மேற்கே, கிழக்கு சீனக் கடலுக்கு வடக்கேஎயும் அமைந்துள்ளது. இத்தீவு 394 கிமீ நீளமும் 144 கிமீ அகலமும் கொண்டது.

வரலாறு[தொகு]

தாய்வானில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் மனித இனம் தோன்றியதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் தாய்வானின் தற்போதய ஆதிகுடிகளின் முன்னோர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறியதாக அறியப்படுகிறது. இவர்கள் மலே, மற்றும் போலினேசியர்களுடன் தொடர்புடையவர்களெனக் கண்டறியப்பட்டுள்ளது[2].

ஐரோப்பியக் குடியேற்றம்[தொகு]

1544இல் போர்த்துக்கேயர் இங்கு வந்தனர். ஆயினும் இவர்களுக்கு இங்கு குடியேறும் நோக்கமிருக்கவில்லை. 1624இல் டச்சுக்காரர் வந்திறங்கினர். இவர்கள் பியூஜியன் மற்றும் பெங்கு போன்ற இடங்களிலிருந்து கூலிகளைக் குடியேற்றி தாய்வானை வர்த்தக மையமாக்கினர்.

சீன மன்னராட்சி[தொகு]

ஜப்பானியர் ஆட்சி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Taiwan". The World Factbook. United States Central Intelligence Agency. பார்த்த நாள் 6 May 2019.
  2. Trejaut, Jean; Toomas Kivisild, Jun Hun Loo, Chien Liang Lee, Chun Lin He, Chia Jung Hsu, Zheng Yuan Li, Marie Lin (August 2005). "Traces of Archaic Mitochondrial Lineages Persist in Austronesian-Speaking Formosan Populations". PLoS Biology 3 (8). http://biology.plosjournals.org/perlserv/?request=get-document&doi=10.1371/journal.pbio.0030247. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைவானின்_புவியியல்&oldid=2893216" இருந்து மீள்விக்கப்பட்டது