உள்ளடக்கத்துக்குச் செல்

தைரோட்ரோபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தைரோட்ரோபின் அல்லது தைராய்டைத் தூண்டிவிடும் ஹார்மோன் (TSH) என்றழைக்கப்படும் தைரோட்ரோபின் 28,000 டால்டன்கள் மூலக்கூறு எடையையுடைய ஒரு கிளைகோபுரதமாகும். இதில் 211 அமினோ அமிலங்கள் அடங்கியுள்ளன. இதன் செயல்படும் உறுப்பு, தைராய்டு சுரப்பியாகும். இது தைரய்டு சுரப்பியைத் தூண்டி, தைராக்ஸினைச் சுரக்கச் செய்கிறது. ஹைபோதலாமஸின் வெளிவிடும் காரணிக்கும், இரத்தத்தின் தைராக்ஸின் அளவுக்கும் இடையே ஒரு எதிர்த் தூண்டல் அமைப்புச் செயல்படுகிறது. இரத்தத்தில் தைராக்ஸின் அளவு குறையுமேயானால், ஹைபோதலாமஸ் TSH வெளிவிடும் காரணியைச் சுரந்து, பிட்யூட்டரியின் TSH வெளிவரச் செய்து, அதன் மூலம் தைராய்டு சுரப்பியைத் தூண்டி தைராக்ஸினைச் சுரக்கச் செய்கிறது. இதே போன்று, தைராக்ஸின் அளவு இரத்தத்தில் அதிகமாகக் காணப்பட்டால், ஹைபோதலாமஸ் எதிர்மறையாகச் செயல்பட்டு தைராக்ஸின் சுரப்பைக் கட்டுப்படுத்தப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தைரோட்ரோபின்&oldid=1461452" இலிருந்து மீள்விக்கப்பட்டது