தைராய்டு ஏன்? எதற்கு? எப்படி?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

தைராய்டு ஏன்? எதற்கு? எப்படி? என்ற நூலானது ஆரோக்கியம்-நல்வாழ்வு பேலியோ குழுவில் தமிழ் மொழியில் தைராய்டு பற்றி தெளிவான விவரங்களுடன் வெளிவந்த சின்ன பட்டாம்பூச்சியா நம்மை சிறைப்படுத்துவது தொடர்தான் அதனைக் கட்டுக்குள் வைக்கும் தீர்வுகளோடும், உண்ணத்தகுந்த உணவுகள் பற்றிய குறிப்புகளோடு வந்துள்ளது.

தைராய்டின் விவரங்கள்[தொகு]

சிக்கலான பெயர்கள் அடங்கிய தைராய்டின் விவரங்களை எளிய முறையில் இந்த நூலின் ஆசிரியர் ஜி.முத்துராமன் விளக்கியுள்ளார். இவர் சிக்கலான மருத்துவம் தொடர்பான எளிமையான தமிழில் புரியும் வண்ணம் எழுதுவது இவரது பாணியாக உள்ளது. தைராய்டின் குறைபாட்டிற்காக காலை வெறும் வயிற்றில் மாத்திரை போட்டுக் கொள்வதோடு நம் கடமை முடிந்துவிடுவதாக நாம் நினைக்கின்றோம். ஆனால் அது எந்த அளவிற்கு நம் உடலின் பல பாகங்களைக் கட்டுப்படுத்துகிறது என்பது துவங்கி ஆரோக்கிய வாழ்விற்கு அதன் செயல்பாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கும் நூலாக உள்ளது.

வாழ்க்கை முறையில் தைராய்டின் செயல்பாட்டை அறிதல்[தொகு]

இந்த நூலை பக்கங்களை புரட்டி வேகமாக படிக்காமல் தைராய்டின் செயல்பாடுகள் என்ன? அதற்குத் தகுந்தாற்போல் நாம் கடைபிடிக்கும் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை இந்த நூலானது விளக்குகிறது.

உடல் பருமனுக்கான தைராய்டின் செயல்பாடு[தொகு]

உடல் பருமனால் அவதிப்படும் மக்கள் குறிப்பாக பெண்கள் அதிகம் தைராய்டு குறைபாட்டால் அவதிப்படுகின்றனர். கருத்தரிப்பில் பிரச்னை துவங்கி பல விதமாக சிக்கல்களுக்கு தைராய்டின் செயல்பாட்டில் ஏற்படும் குறைபாடு முக்கிய காரணியாக விளங்குகிறது என்பதை இந்நூல் விளக்குகிறது.

சான்றாதாரம்[தொகு]

தைராய்டு ஏன்? எதற்கு? எப்படி?(ஜனவரி-2017).ஜி.முத்துராமன்(ஆசிரியர்).ஆரோக்கியம் நல்வாழ்வு,சென்னை-77.