தையூர்
தையூர் என்ற கிராமம் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையில் இருந்து 31.46 கி.மீ. (19.55 மைல்) தொலைவில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2]
விவரங்கள்
[தொகு]இதற்கு முன்னர் இவ்வூர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது.[3]இது முதன்மையாக ஒரு விவசாய கிராமம்.[4] இது உப்பு உற்பத்திக்குப் பிரபலமானது.[5] இந்தக் கிராமத்தில் ஸ்ரீ மோதிலால் கன்ஹையல் ஃபோம்ரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.[6]
அமைவிடம்
[தொகு]தையூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 16.76 மீ. உயரத்தில், (12°46′38.37″N 80°11′39.06″E / 12.7773250°N 80.1941833°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருப்போரூர் நகருக்கு அருகில் அமையப் பெற்றுள்ளது.
சுற்றுலாத் தலம்
[தொகு]கேளம்பாக்கம் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திலுள்ள தையூர் புறநகரில் ஒரு சிறிய ஏரியும், சிறிய நீர்வீழ்ச்சியுடன் கூடிய அணைக்கட்டு ஒன்றும் அமைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக தையூர் உள்ளது.[7]
அரசியல்
[தொகு]தையூர் பகுதியானது, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thaiyur Village (Pincode: 603103), Tiruporur, Chengalpattu | Tamil Nadu | – Population, Area, Nearby Villages, Assembly & Parliament Constituency". villageinfo.org. Retrieved 2026-08-24.
- ↑ "Management". SMK Fomra. Retrieved 28 September 2009.
- ↑ Thaiyur ...
- ↑ Harriss, John (1982). Capitalism and peasant farming: agrarian structure and ideology in northern Tamil Nadu. Oxford University Press. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-561340-7
- ↑ Breman, Jan; Peter Kloos; Ashwani Saith (1997). The village in Asia revisited. Oxford University Press. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-564020-5
- ↑ Counselling Guru: A Comprehensive Guide for Tamilnadu Engineering Admissions (in ஆங்கிலம்). Guru Vinayana Academy. 2014-06-25.
- ↑ Yogalakshmy Ponnan (2025-01-30). "சென்னைக்குள் ஒரு குட்டி நீர்வீழ்ச்சி – இந்த வாரமே உங்கள் வீட்டு குட்டீஸ்களை அழைத்து செல்லுங்கள்!". tamil.nativeplanet.com. Retrieved 2026-08-23.
- ↑ "Thaiyur Village , Thiruporur Block , Kanchipuram District". www.onefivenine.com. Retrieved 2026-08-24.