தைமிடின் மோனோபாசுபேட்டு
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தைமிடின் மோனோபாசுபேட்டு
| |
இனங்காட்டிகள் | |
Abbreviations | dTMP |
Beilstein Reference
|
3916216 |
ChEBI | CHEBI:26999 ![]() |
ChEMBL | ChEMBL394429 ![]() |
ChemSpider | 10239189 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 16755631 |
SMILES
| |
பண்புகள் | |
C10H14N2O8P1− | |
வாய்ப்பாட்டு எடை | 321.2005 கி மோல் −1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
தைமிடின் மோனோபாசுபேட்டு (Thymidine monophosphate) என்பது C10H14N2O8P1− என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தைமிடிலிக் அமிலம், குறையாக்சிச தைமிடின் மோனோபாசுபேட்டு, குறையாக்சிச தைமிடிலிக் அமிலம், தைமிடின் ஒருபாசுபேட்டு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. உட்கரு அமில மூலமான இச்சேர்மம் டி.என்.ஏ வில் ஓர் ஒருமமாக பயன்படுத்தப்படுகிறது. தைமிடின் என்ற நியூக்ளியோசைடைக் கொண்டுள்ள ஒரு பாசுபாரிக் அமில எசுத்தராகவும் இது கருதப்படுகிறது. பெண்டோசு சர்க்கரை குறையாக்சிச ரிபோசு என்ற பாசுபேட்டு குழு ஒன்றும் தைமின் என்ற உட்கருவமில அடிமூலக்கூறு ஒன்றும் சேர்ந்து குறையாக்சிச தைமிடின் மோனோபாசுபேட்டு சேர்மத்தை உருவாக்குகின்றன. பிற குறையாக்சிசரிபோ நியூக்ளியோடைடுகள் போல தைமிடின் மோனோபாசுபேட்டு பெரும்பாலும் அதன்பெயரில் குறையாக்சிச என்ற முன்னொட்டை பயன்பட்டுத்துவதில்லை. மாறாக "d" என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது. [1] தோர்லாண்டின் விளக்கப்பட்ட மருத்துவ அகராதி தைமிடினுக்கான பதிவில் இதன் பெயரிடல் மாறுபாடு குறித்த விளக்கத்தை வழங்குகிறது. [2]
ஒரு மாற்றீடாக கருதப்படும்போது இது தைமிடிலைல் என்ற முன்னொட்டு மூலம் அழைக்கப்படுகிறது.
மேலும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ The ACS style guide: effective communication of scientific information (3rd ). Washington, D.C.: American Chemical Society. 2006. பக். 244. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8412-3999-9. https://archive.org/details/acsstyleguideeff0000unse/page/244.
- ↑ Elsevier, Dorland's Illustrated Medical Dictionary, Elsevier, 2014-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2020-10-19 அன்று பார்க்கப்பட்டது.